Home
Mobile

வெளுக்குது விற்பனை.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 50W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) டிரான்ஸ்பரண்ட் மெட்டாலிக் பேனல் மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, சாம்சங் சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 50W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) மாடலானது, டிஸ்கவுண்ட் உடன் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த நத்திங் போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

நத்திங் போன் 2ஏ பிளஸ் அம்சங்கள் (Nothing Phone 2a Plus Specifications): இந்த நத்திங் போனில் 6.7 இன்ச் (2412 × 1084 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்டுள்ளது.

வெளுக்குது விற்பனை.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 50W சார்ஜிங்!

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் வருகிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு நத்திங் ஓஎஸ் 2.6 (Nothing OS 2.6) மற்றும் மிட்-ரேஞ்ச் கேமிங் அவுட்புட் கொடுக்கும் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த நத்திங் போன் 2ஏ பிளஸ் போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7350 ப்ரோ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7350 Pro 4nm) சிப்செட் வருகிறது. சாம்சங் ஜிஎன்9 (Samsung GN9) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா வருகிறது.

இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி, 4K வீடியோ ரெக்கார்டிங், ஆக்சன் மோட் (Action Mode) வருகிறது. அதேபோல சாம்சங் ஜேஎன்1 சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. பிராண்ட் சென்சார்கள் வருவதால், கேமராவில் பிரீமியம் போட்டோகிராபி அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

இந்த நத்திங் போன் 2ஏ பிளஸ் போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Scanner) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

டைப்-சி ஆடியோ (Type-C Audio), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த நத்திங் போன் 2ஏ பிளஸ் போனில் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி உடன் 190 கிராம் எடை மற்றும் 8.55 மிமீ தடிமன் வருகிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனை தொடங்கிவிட்டது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

கிரே (Grey) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. டிரான்ஸ்பரன்ட் டிசைன் மற்றும் எல்இடி லைட்னிங் கொண்ட பேக் பேனல் மட்டுமல்லாமல், பிரீமியம் டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி சிஸ்டம் கொண்ட மொபைல் வேண்டுமானால், இந்த நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடலை ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
6 Percent Discount on Nothing Phone 2a Plus With 50MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X