வெளுத்துக்கட்டும் விற்பனை.. வெறும் ரூ.13999 போதும்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 5000mAh பேட்டரி, 1டிபி மெமரி, 50 எம்பி கேமரா போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட ஐடெல் எஸ்23 பிளஸ் (itel S23 Plus) போன் கிடைக்காத பட்ஜெட்டில் வந்துள்ளது.
பிரீமியம் லுக்கில் பின்னிப்பெடல் எடுக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர், ஐவானா ஜிபிடி ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (Aivana GPT AI Voice Assistant) போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களிலும் மிரளவிடுகிறது. இந்த போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்ப்போம்.

ஐடெல் எஸ்23 பிளஸ் அம்சங்கள் (itel S23 Plus Specifications): இந்த ஐடெல் போனின் டிஸ்பிளே பீச்சர்களே வாங்க தூண்டும்படி இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் (Corning Gorilla Glass 5 Protection) கொண்ட 6.78 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது.
இதுவொரு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) மாடலாகும். அதோடு 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ஆகவே, பட்ஜெட்டை விட கூடுதல் அவுட்புட் எதிர்பார்க்காலம். 3டி கர்வ்ட் டிசைன் வருவதால், பிரீமியம் ஹேண்டில் பீல் கொடுக்கும். இந்த ஐடெல் பி40 பிளஸ் போனில் 50 எம்பி சூப்பர் கிளியர் கேமரா (Super Clear Camera) வருகிறது. அதோடு செகண்டரி ஏஐ கேமரா (Secondary AI Camera) வருகிறது. 10எக்ஸ் ஜூம் (10X Zoom) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

அதேபோல 32 எம்பி போர்ட்ராய்டு செல்பீ கேமரா (Portrait Selfie Camera) வருகிறது. இந்த கேமராவில் ஐ டிராக்கிங் மோட் (Eye Tracking Mode) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர்கள் கொண்ட ஐடெல் ஓஎஸ் 13 (itel OS 13) வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டிருக்கிறது.
பட்ஜெட் சிப்செட்டான ஆக்டா கோர் யுனிசோக் டி616 12என்எம் (Octa-Core UNISOC T616 12nm) வருகிறது. மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கொண்டிருக்கிறது. இந்த ஐடெல் பி40 பிளஸ் போனில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது.
ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) வருகிறது. 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. 7.9மிமீ தடிமன் மற்றும் 179 கிராம் எடையில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டுள்ளது.
சைடு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Fingerprint Scanner) வருகிறது. இதுவொரு டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்ட மாடலாகும். எலிமெண்டல் ப்ளூ (Elemental Blue), லேக் சியான் (Lake Cyan) மற்றும் எனர்ஜிடிக் ஆரஞ்ச் (Energetic Orange) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த ஐடெல் பி40 பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. எச்எஸ்பிசி கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த டிஸ்கவுண்ட்டை பெறலாம். ஆகவே, இந்த போனை வெறும் ரூ.13,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








