3 மாசம் தான் ஆகுது.. இதான் சாக்குனு ஆர்டர் அடிச்சு நொறுக்குறாங்க.. iPhone 15 மீது திடீர் விலை குறைப்பு!
வழக்கமாக புதிய ஐபோன்கள் அறிமுகமான பின்னரே பழைய ஐபோன்களின் விலைகள் குறைக்கப்படும். ஆனால் தற்போது 3 மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 15 (Appple iPhone 15) மாடலானது, அதன் அசல் விலையை விட மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது
"என்னடா இது ஆப்பிளுக்கு வந்த சத்திய சோதனை!" என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் இது ஆப்பிளின் விலை குறைப்பு அல்ல. அமேசான் இந்தியா வலைதளத்தின் சிறப்பு தள்ளுபடியாகும். ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், ஐபோன் 15-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இன்னமும் ரூ.79,900 க்கு தான் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆனால் அமேசான் வலைத்தளத்தில் ஐபோன் 15 மீது 6% நேரடி தள்ளுபடி (Instant Discount) கிடைக்கிறது. இதன்கீழ் 128ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 மாடலை ரூ.79,900 க்கு பதிலாக ரூ.74,900 க்கு வாங்க முடியும். சுவாரசியமாக ஐபோன் 15-ன் 256ஜிபி ஸ்டோரேஜின் மீதும் 6% தள்ளுபடி கிடைக்கிறது.
இதன்கீழ் 356ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 மாடலை ரூ.89,900 க்கு பதிலாக ரூ.84,900 க்கு வாங்க முடியும். இதேபோல ஐபோன் 15-ன் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது 2% தள்ளுபடி கிடைக்கிறது. அமேசானில் தற்போது இது ரூ.1,09,900 க்கு பதிலாக ரூ.1,07,900 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் ஆப்பிள் ஐபோன் 14 (iPhone 14) மீதான அமேசான் தள்ளுபடியை தேடுகிறீர்கள் என்றால், ஐபோன் 14-ன் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 22% தள்ளுபடியின் கீழ் வாங்க கிடைக்கிறது. தற்போது இது ரூ.79,900 க்கு பதிலாக ரூ.61,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல அமேசான் இந்தியா வலைத்தளத்தில், ஆப்பிள் ஐபோன் 13 (iPhone 13) மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 11% தள்ளுபடியை பெற்று ரூ.53,499 க்கு வாங்க கிடைக்கிறது, நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 13-ன் அசல் ஆரம்ப விலை ரூ..59,900 ஆகும்.

முடிந்தவரை ஐபோன் 13 மாடலை வாங்குவதை தவிர்க்கவும், ஏனென்றால் தற்போது ஐபோன் 14-க்கும் ஐபோன் 13-க்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் ரூ.8500 மட்டுமே ஆகும். இன்னமும் ஐபோன் 13 ஒரு பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனாக (Best-selling Smartphone) இருந்தாலும் கூட, முடிந்தவரை 1 ஆண்டு பழைய ஐபோன் 14 மாடலை வாங்கவும்.
ஒருவேளை உங்களிடம் ஆப்பிள் ஐபோனை வாங்கும் அளவிற்கு உங்களிடம் பட்ஜெட் இல்லை என்றால், அமேசான் தளத்தில் தற்போது கிடைக்கும் வேறு சில பெஸ்ட் மொபைல் போன் ஆஃபர்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால்.. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். தற்போது 7% தள்ளுபடியை பெற்று ரூ.26,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G) ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அமேசான் வலைத்தளத்தில் தற்போது இது 23% தள்ளுபடியை பெற்று ரூ.25,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரெட்மி நோட் 12 (Redmi Note 12) ஸ்மார்ட்போன் தற்போது 37% தள்ளுபடியை பெற்று ரூ.18,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது? 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஃபுல்-எச்டி+ எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 ஓஎஸ், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர், 108எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 67W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








