விட்ராதீங்க இதை.. ரூ.5000 விலை குறைப்பு.. 12GB ரேம்.. 48MP அல்ட்ரா வைடு.. 4700mAh பேட்டரி.. எந்த மாடல்?
2025ஆம் ஆண்டுக்கான பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் (Flipkart Republic Day Sale) கூகுள் நிறுவனத்தின் பிக்சல் (Pixel) மாடல்களுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆனால், இதில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இல்லாமலேயே நேரடி விலை குறைப்பில் கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9) போன் கிடைக்கிறது. இந்த பிரீமியம் மாடலுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
இந்த கூகுள் பிக்சல் 9 போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் வெறும் ரூ.74,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.5000 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த விலை குறைப்புக்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் தேவையில்லை. நேரடியாக விலை குறைப்பில் வாங்கி முடியும்.

கூகுள் பிக்சல் 9 அம்சங்கள் (Google Pixel 9 Specifications): கூகுள் போன்களில் ஆண்ட்ராய்டு அப்டேட்களுக்கு பஞ்சமே இருக்காது. ஆகவே, இந்த பிக்சல் 9 போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஸ் (Android 14) மட்டுமல்லாமல், 7 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. கூகுள் போன்களுக்கு மட்டுமே கிடைக்கும். கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட்டை பேக் செய்துள்ளது.
இதுபோக டைட்டன் எம்2 (Titan M2) என்னும் பிரீமியம் செக்யூரிட்டி சிப் கிடைக்கிறது. இந்த பிக்சல் போனில் 50 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் ஜிஎன்கே (Samsung GNK) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் எல்டிஏஎப் (LDAF) ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சோனி ஐஎம்எக்ஸ்858 (Sony IMX858) சென்சார் அல்ட்ரா வைடு கேமராவில் கிடைக்கிறது. இதில் மேக்ரோ ஆப்ஷனும் வருகிறது. 4K வீடியோ ஷூட், 8X ஹை-ரெசொலூஷன் ஜூமிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த கூகுள் பிக்சல் 9 போனில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சாருடன் 10.5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது.
இந்த அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Gorilla Glass Victus 2) பாதுகாப்பு, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த பிக்சல் போனின் பேட்டரியை பார்க்கையில், 27W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கும் 4700mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது.
மற்ற பீச்சர்களை பார்க்கையில், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (Ultrasonic In-display Fingerprint) கிடைக்கிறது. மேலும், IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. அப்சிடியன், பேயோனி, போர்ஸ்லைன் மற்றும் விண்டர்கிரீன் ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. பிரீமியம் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாகும்.
ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் பிரீமியம் போன்களுக்கு நிகரான பீச்சர்களை கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போன்களும் கொடுக்கின்றன. ஆனால், மார்கெட்டில் புதிதாக களமிறங்கி இருப்பதால், அந்த போன்களுக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும், பீச்சர்கள் மிரண்டுபோகும் படி பேக் செய்யப்பட்டுள்ளன. இதில் கூகுள் பிக்சல் 9 முக்கியமான மாடலாகும்.


Click it and Unblock the Notifications








