செம்ம சான்ஸ்.. 5G ஆதரவுடன் வரும் 6 OnePlus போன்கள் மீது அள்ளும் ஆஃபர்.. இதோ முழு விவரங்கள்!
லேட்டஸ்ட் ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன்களை ஆஃபர் விலையில் வாங்க இதைவிட ஒரு சிறந்த நேரம் அமையாது. ஏனென்றால், ஒன்பிளஸ் இந்தியா நிறுவனமானது ஒன்பிளஸ் 5ஜி அப்கிரேட் டேஸ் (OnePlus 5G Upgrade Days) என்கிற சிறப்பு விற்பனையை (Special Sale) நடத்தி வருகிறது.
ஒன்பிளஸின் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது? இந்த சிறப்பு விற்பனை எப்போது முடியும்? இதை எந்த வலைதளம் வழியாக அணுக வேண்டும்? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்:

இந்த சிறப்பு விற்பனை எப்போது முடியும்? ஒன்பிளஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ஒன்பிளஸ்.இன் வழியாக ஏற்கனவே தொடங்கிவிட்ட இந்த சிறப்பு விற்பனையானது, வருகிற 2023 மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கும். இதன் கீழ் 5ஜி ஆதரவுடன் வரும் 6 ஒன்பிளஸ் போன்கள் மீது எக்கச்சக்கமான சலுகைகள் கிடைக்கிறது!
எந்தெந்த ஒன்பிளஸ் 5ஜி போன்கள் மீது ஆஃபர் கிடைக்கிறது? ஒன்பிளஸ் 5ஜி அப்கிரேட் டேஸ் விற்பனையின் கீழ் ஒன்பிளஸ் 11 5ஜி, ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி, ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி , ஒன்பிளஸ் 10டி 5ஜி, ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி என மொத்தம் 6 ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 11 5ஜி மீது கிடைக்கும் சலுகைகள்: 4ஜி ஆதரவுடன் வரும் ஒன்பிளஸ் அல்லது ஐபோன்களை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.5,000 தள்ளுபடி; பழைய 4ஜி ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.3,000 தள்ளுபடி; முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் வழியாக 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ உட்பட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி மீது கிடைக்கும் சலுகைகள்: 4ஜி ஆதரவுடன் வரும் ஒன்பிளஸ் அல்லது ஐபோன்களை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.3,000 தள்ளுபடி; பழைய 4ஜி ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.3,000 தள்ளுபடி; முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் வழியாக 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ உட்பட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மீது கிடைக்கும் சலுகைகள்: ரூ.11,000 சிறப்பு தள்ளுபடி; 4ஜி ஆதரவுடன் வரும் ஒன்பிளஸ் அல்லது வேறு நிறுவனங்களின் 4ஜி போன்கள் அல்லது ஐபோன்களை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.10,000 தள்ளுபடி; முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் வழியாக 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ உட்பட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 10டி 5ஜி மீது கிடைக்கும் சலுகைகள்: ரூ.5,000 சிறப்பு தள்ளுபடி; 4ஜி ஆதரவுடன் வரும் ஒன்பிளஸ் அல்லது வேறு நிறுவனங்களின் 4ஜி போன்கள் அல்லது ஐபோன்களை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.10,000 தள்ளுபடி; பஜாஜ் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ உட்பட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி மீது கிடைக்கும் சலுகைகள்: ரூ.3,000 சிறப்பு தள்ளுபடி; 4ஜி ஆதரவுடன் வரும் ஒன்பிளஸ் அல்லது வேறு நிறுவனங்களின் 4ஜி போன்கள் அல்லது ஐபோன்களை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.3,000 தள்ளுபடி; முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் வழியாக 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ உட்பட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் கடைசியாக உள்ள ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மீது 5% தள்ளுபடி கிடைக்கிறது, மேற்கண்ட ஒன்பிளஸ் போன்கள் மீது கிடைக்கும் மற்ற சலுகைகளை பற்றி அறிய ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (https://www.oneplus.in/) சென்று, அதிலுள்ள அப்கிரேட் சேல் பேனரை கிளிக் செய்யவும் அல்லது ஆஃபர்ஸ் என்கிற டேப்-ஐ கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








