Home
Mobile

பிப்.25-29.. அடுத்த 5 நாட்களில் 6 புதிய போன்கள் அறிமுகம்! ரூ.10000 போனும் உண்டு.. ரூ.70000 மாடலும் உண்டு!

பிப்.25 - 29 ஆம் தேதிக்குள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பல ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphones) அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவைகளில் பட்ஜெட்-விலை மாடல்களும் உள்ளன; பிளாக்ஷிப் மாடல்களும் உள்ளன. என்னென்ன ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும் ? இதோ விவரங்கள்:

01. ஷாவ்மீ 14 சீரீஸ் (Xiaomi 14 Series): இது வருகிற பிப்.25 ஆம் தேதியனற்று இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சீரீஸின்கீழ் ஷாவ்மீ 14 (Xiaomi 14) மற்றும் ஷாவ்மீ 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகமாகும்.

பிப்.25-29.. அடுத்த 5 நாட்களில் 6 புதிய போன்கள் அறிமுகம்!

வெண்ணிலா ஷாவ்மீ 14 மாடலானது 6.36-இன்ச் 1.5கே LTPO 120Hz OLED டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப், ட்ரிபிள் 50எம்பி லைக்கா-டியூன்டு கேமரா, 3.2எக்ஸ் ஃப்ளோட்டிங் டெலிஃபோட்டோ லென்ஸ், 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 4610mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும். இதன் விலை ரூ.64,999 ஆக இருக்கலாம்.

மறுகையில் உள்ள ஷாவ்மீ 14 அல்ட்ரா மாடலானது, சற்றே பெரிய 6.73-இன்ச் QHD+ LTPO 120ஹெர்ட்ஸ் OLED டிஸ்பிளே, அதே குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், லைகா-டியூன்டு 50எம்பி குவாட்-கேமரா செட்டப், 5எக்ஸ் பெரிஸ்கோப் லென்ஸ், 80W வயர்லெஸ் சார்ஜிங்குடன் 90W வயர்டு சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.73,999 ஆக இருக்கலாம்.

பிப்.25-29.. அடுத்த 5 நாட்களில் 6 புதிய போன்கள் அறிமுகம்!

02. ரியல்மி 12 பிளஸ் (Realme 12 Plus): இது பிப்ரவரி 27 ஆம் தேதியன்று அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது அடுத்த மாதம் இந்தியாவிற்கு வரும். இது 6.67-இன்ச் FHD+ 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட், 50எம்பி சோனி LYT-600 மெயின் கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 67W வயர்டு சார்ஜிங் ஆதரவு போன்ற முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும்.இது ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

03. டெக்னோ ஸ்பார்க் 20சி (Tecno Spark 20C): இது பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது 90ஹெர்ட்ஸ் HD+ டிஸ்பிளே, 50எம்பி மெயின் கேமரா, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், 5000mAh பேட்டரி மற்றும் 18W சார்ஜிங் ஆதரவு போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும். இது ரூ.10,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

பிப்.25-29.. அடுத்த 5 நாட்களில் 6 புதிய போன்கள் அறிமுகம்!

04. ஒப்போ எப்25 ப்ரோ 5ஜி (Oppo F25 Pro 5G): இது பிப்ரவரி 29 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இது 6.7-இன்ச் 120ஹெர்ட்ஸ் OLED டிஸ்பிளே, 64MP மெயின் கேமரா, 32MP செல்பீ கேமரா, மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப், IP65 ரேட்டிங் 5,000mAh பேட்டரி மற்றும் 67W வயர்டு சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களை கொண்டிருக்கும். இது ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

05. மெய்ஸூ 21 ப்ரோ (Meizu 21 Pro): இது பிப்ரவரி 29 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.இருப்பினும் திட்டமிட்டபடி கடைசியாக இந்த ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப், 2கே OLED டிஸ்பிளே, ஏரியா இன்-ஸ்கிரீன் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 80W வயர்டு சார்ஜிங் போன்ற அம்சங்களை பேக் செய்யும்.

Best Mobiles in India

English summary
6 new smartphones launching in india and china between feb 25 to 29 check model price specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X