Home
Mobile

நல்ல மாசம் பொறந்துடுச்சு.. இந்த மே மாசத்துல அறிமுகமாகும் 6 அம்சமான புது போன்கள்.. என்ன போன்.. எவ்வளவு?

கடந்த 2024 ஏப்ரலில்.. மோட்டோரோலா, ரியல்மி மற்றும் இன்பினிக்ஸ் உள்ளிட்ட பல பிராண்டுகள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தின. அதைவிட இந்த மே மாதமானது.. இன்னும் சிறப்பாக இருக்கப்போகிறது. ஏனென்றால் இம்மாதம் 6 அம்சமான புது போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

சாம்சங், ஐக்யூ மற்றும் இன்பினிக்ஸ் போன்ற பல பிராண்டுகள் ஏற்கனவே தங்களுடைய அப்கம்மிங் ஸ்மார்ட்போன்களை டீஸ் தொடங்கியுள்ளன. அப்படியாக இந்த 2024 மே மாதத்தில் என்னென்ன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்.. என்னென்ன மாடல்களை அறிமுகம் செய்யும்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? என்கிற விவரங்கள் இதோ:

இந்த மே மாசத்துல அறிமுகமாகும் 6 அம்சமான புது போன்கள்!

1. கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a): இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை கூகுள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, இது மே 14 ஆம் தொடங்கும் கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டின் போது அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பிக்சல் 8 ப்ரோ மாடலில் உள்ள அதே டென்சர் ஜி3 சிப் மூலம் இயக்கப்படலாம். மேலும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.1 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். கூடுதலாக, இது ஐபி67 ரேட்டிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கலாம். கடைசியாக இது 7 ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.50,000 க்கு கீழ் இருக்கும்.

2. சாம்சங் கேலக்ஸி எஃப்55 (Samsung Galaxy F55): இது மே மாதத்தில் அறிமுகமாகும் இன்னொரு சுவாரஸ்யமான ஸ்மார்ட்போன் ஆகும். இது 2 ஆண்டுகளுக்கு வேகன் ஸ்கின் உடன் வரும் சாம்சங் ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த மிட்-டையர் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

மேலும் இது 6.7-இன்ச் 120ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன்யுஐ 6.1 ஓஎஸ், குறைந்தது 4 மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை பெறும். விலையை பொறுத்தவரை கேலக்ஸி எஃப்55 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.25,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

3. இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ (Infinix GT 20 Pro): நீங்கள் ஒரு மலிவான கேமிங் ஸ்மார்ட்போனை தேடுகிறீர்களானால், இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோவை கருத்தில் கொள்ளலாம். இது கடந்த ஆண்டு அறிமுகமான ஜிடி 10 ப்ரோவின் "மேம்படுத்தப்பட்ட" வாரிசாக இருக்கும்.

அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட், 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் OLED டிஸ்பிளே மற்றும் தடையற்ற கேமிங்கிற்காக 360ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்றவைகளை கொண்டிருக்கும். இதன் விலை சுமார் ரூ.25,000 க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. ஐக்யூ இஸட்9எக்ஸ் (iQOO Z9x): இது மே 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஐக்யூ 12 மாடலில் உள்ள கேமரா மாட்யூலைக் கொண்ட பட்ஜெட் விலைக்கு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இது 12ஜிபி வரையிலான ரேம் உடன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்டை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான எல்சிடி டிஸ்பிளே, 4கே வீடியோக்களை எடுக்கக்கூடிய 50எம்பி மெயின் கேமரா மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி உட்பட பல குறிப்பிடத்தக்க அம்சங்களை கொண்டிருக்கும். இதன் விலை ரூ.20,000 க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. போக்கோ எஃப்6 (Poco F6): இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். எப்போதும் மதிப்பு மற்றும் செயல்திறனுக்காக நன்கு அறியப்படும் போக்கோ எஃப் சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில், இதுவும் நிச்சயம் இணையும். இது சுமார் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4): இது ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆக்சிஜன் ஓஎஸ் 14, அலெர்ட் ஸ்லைடர், பெசல்-லெஸ் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளே, போன்ற அம்சங்களை ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
6 New Phones From Google Samsung OnePlus Poco iQOO Infinix Launching in May 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X