Home
Mobile

6 Motorola போன்கள் மீது அடேங்கப்பா ஆஃபர்.. பொளந்து கட்டும் Flipkart Big Diwali Sale தள்ளுபடிகள்!

கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் நீடித்த நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை கால விற்பனை மற்றும் பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு (Big Billion Days Sale) பிறகு, பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது தீபாவளி பண்டிகைக்கான தனது சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.

ஏற்கனவே (நவம்பர் 2 ஆம் தேதி முதல்) தொடங்கிவிட்ட பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையானது வருகிற நவம்பர் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. வழக்கம் போல இந்த விற்பனையின் போதும், ​​ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், பிசிக்கள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட பல தயாரிப்புகளின் மீது பரந்த அளவிலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.

6 Motorola போன்கள் மீது அடேங்கப்பா ஆஃபர்!

ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகளை பொறுத்தவரை, சாம்சங் (Samsung), ரியல்மி (Realme), ஒன்பிளஸ் (OnePlus) உட்பட பல முன்னணி பிராண்டுகளின் மாடல்கள் லாபகரமான விலையில் வாங்க கிடைக்கின்றன. குறிப்பாக மோட்டோரோலோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மீது முன் எப்போதும் இல்லாத அளவிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 40 (Motorola Edge 40) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், பிளிப்கார்ட்டில் தற்போது ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வன்ணம், இந்த ஸ்மார்ட்போனின் இதன் அசல் விலை ரூ.34,999 ஆகும். அதாவது இது 22 சதவீதம் நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது.

6 Motorola போன்கள் மீது அடேங்கப்பா ஆஃபர்!

மோட்டோரோலா எட்ஜ் 40 மாடலின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.55-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் (2400 x 1080 பிக்சல்ஸ்) பிஓஎல்இடி டிஸ்பிளே, 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட், மீடியா டெக்டைமன்சிட்டி 8020 சிப்செட், 68W வயர்டு டர்போபவர் சார்ஜிங் ஆதரவு போன்றவைகளை கொண்டுள்ளது.

இந்த பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையின் போது மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனின் மீது தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், முறையே ரூ.22,999 மற்றும் ரூ.24,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

6 Motorola போன்கள் மீது அடேங்கப்பா ஆஃபர்!

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மாடலானது 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 சிப்செட், 6.55-இன்ச் ஃபுல்பிளஸ் பிஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளே, 50 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 68W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

இதேபோல இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் மீது தள்ளுபடி கிடைக்கிறது: இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.13,999 க்கும் மற்றும் ரூ.15,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

6 Motorola போன்கள் மீது அடேங்கப்பா ஆஃபர்!

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்பிளே, குவாட் பிக்சல் தொழில்நுட்பம் மற்றும் ஓஐஎஸ் ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப்செட் மற்றும் 33W டர்போபவர ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 6,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

இந்த பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையின் போது மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனின் மீது தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி + 256ஜிபி இன்டர்னல் ஸ்டரோஜ் ஆப்ஷன் தற்போது ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 6.55 இன்ச் ஃபுல்-எச்டி+ பி ஓஎல்இடி டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 33W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

இதேபோல மோட்டோ ஜி14 (Moto G14) மற்றும் மோட்டோ இ13 (Moto E13) போன்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் மீது தள்ளுபடி கிடைக்கிறது. மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,499 க்கும், மற்றும் மோட்டோ இ13 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
6 Motorola Smartphones Available Under Discounted Price in Flipkart Big Diwali Sale 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X