விட்றாதீங்க.. 6 மாசம் ஆகல.. ரூ.4000 விலை குறைப்பு.. 12GB ரேம், 64MP OIS கேமரா, 67W சார்ஜிங்.. என்ன மாடல்?
சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு போக்கோ ஸ்மார்ட்போனின் மீது ரூ.4000 வரையிலான விலைக்குறைப்பு கிடைக்கிறது. நாம் இங்கே பேசுவது போக்கோ எக்ஸ்6 5ஜி (Poco X6 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்த போக்கோ ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது மற்றும் சுவாரசியமாக அனைத்து 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே விலைக் குறைப்பை பெற்றுள்ளன. இது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தின் சிறப்பு சலுகையாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நினைவூட்டும் வண்ணம் கடந்த 2024 ஜனவரி மாதம், போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இவைகள் முறையே ரூ. 21,999 க்கும், ரூ.24,999 க்கும் வாங்க கிடைத்தன.

பின்னர் 2024 பிப்ரவரி மாதத்தில் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் வெளியானது. போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனின் மூன்றாவது ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றது. மூன்றுமே ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ஸ்கைலைன் ப்ளூ மிரர் பிளாக் மற்றும் ஸ்னோஸ்டார்ம் ஒயிட் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைத்தன.
தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.3000 விலை குறைப்பை பெற்று ரூ.21,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது. இதேபோல 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.4000 விலை குறைப்பை பெற்று ரூ.23,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கடைசியாக உள்ள போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனின் ஹை எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ரூ.24,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இது ரூ.3000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது.
போக்கோ எக்ஸ்6 5ஜி என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் 1.5கே (1220 x 2712 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilization) உடனான 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளன முன்பக்க கேமராவை பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS() உடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போனுக்கு, மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (3 Major Android OS Updates) மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கும் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடைசியாக போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 5100mAh பேட்டரியை பேக் செய்கிறது.
போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? சற்றே பழைய (சுமார் 6 மாதங்கள் பழைய) ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. டிஸன்ட் ஆன டிஸ்பிளே, போதுமான பெர்ஃபார்மென்ஸ், நல்ல கேமரா, நல்ல பேட்டரி லைஃப்பை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போனை தேடும் எவருமே போக்கோ எக்ஸ்6 5ஜி மாடலை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








