Home
Mobile

Flipkart-ல ஆடி மாசம் ஆரம்பிச்சுடுச்சு.. தொக்கா ரூ.15,000 டிஸ்கவுண்ட்.. 6 iPhone மாடல்கள் மீது ஆபர் மழை!

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) ஆனது சத்தமில்லாமல் ஒரு சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையானது ஏற்கனவே தொடங்கிவிட்டது; தற்போது இது நேரலையில் உள்ளது. இது ஜூலை 7 ஆம் தேதி வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் ஆனது பிளிப்கார்ட்டின் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கான சிறப்பு விற்பனையை போல் இல்லாமல்.. பெரும்பாலும் ஐபோன், மேக்புக் உட்பட ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது அதிக கவனம் செலுத்துகிறது.

ஆகையால் நீங்கள் ஒரு புதிய ஆப்பிள் ஐபோன் அல்லது ஆப்பிள் மேக்புக் அல்லது ஆப்பிள் ஏர்பாட்ஸ்-ஐ வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே அதற்கான சரியான நேரமாக இருக்கும். ஜூலை 7 ஆம் தேதி வரை நடக்கும் பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் விற்பனையின் கீழ் என்னென்ன ஆப்பிள் தயாரிப்புகள் மீது.. என்னென்ன ஆபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட்கள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

Flipkart-ல ஆடி மாசம் ஆரம்பிச்சுடுச்சு.. 6 iPhone மாடல்கள் மீது ஆபர்!

1. ஆப்பிள் ஐபோன் 15 (iPhone 15) மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்: பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 15 பிளஸ்-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 16% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.89,900 க்கு பதிலாக ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது.

2. ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்: பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 15-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 18% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.79,900 க்கு பதிலாக ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது.

3. ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடலின் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்: பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 15- ப்ரோ மாடல் ஆனது 8% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.1,84,900 க்கு பதிலாக ரூ.1,69,990 க்கு வாங்க கிடைக்கிறது. இது எப்போதும் கிடைத்திராத மிகவும் மலிவான ஆபர் விலை ஆகும்.

4. ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்: பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 14 பிளஸ்-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 26% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.79,900 க்கு பதிலாக ரூ.58,999 க்கு வாங்க கிடைக்கிறது.

5. ஆப்பிள் ஐபோன் 13 (iPhone 13) மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்: பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 13-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 13% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.59,900 க்கு பதிலாக ரூ.51,999 க்கு வாங்க கிடைக்கிறது.

6. ஆப்பிள் ஐபோன் 12 (iPhone 12) மாடலின் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்: பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 12-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 21% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.49,900 க்கு பதிலாக ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது.

7. ஆப்பிள் ஐபாட் 10த் ஜெனரேஷன் (Apple iPad 10th-generation): ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் 10த் ஜெனரேஷன் வைஃபை வேரியண்ட் ஆனது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது ரூ.34,990 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் எச்டிஎப்சி கார்டை உபயோகிப்பதன் மூலம் கூடுதலாக ரூ.1,500 வரையிலான தள்ளுபடயை பெறலாம்.

8. ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2 (Apple MacBook Air M2): முந்தைய ஜெனெரஷன் மேக்புக் மாடல் ஆன மேக்புக் ஏர் எம்2 ஆனது பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் விற்பனையின் போது ரூ.71,990 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்குபவர்கள் கூடுதலாக ரூ.750 தள்ளுபடியை பெறலாம்.

9. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2ன்ட் ஜெனெரஷன் (Apple AirPods 2nd-generation): பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் விற்பனையின் போது 2வது ஜெனெரஷன் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஆனது 34% பிளாட் தள்ளுபடிக்கு பிறகு ரூ.8,499 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கி சலுகைகள் வழியாக கூடுதலாக 10% வரை தள்ளுபடியை பெற்று, இதன் விலையை ரூ.7,690 ஆகவும் குறைக்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
6 iPhones including iPhone 15 iPhone 14 Gets Heavy Discount Flipkart Big Bachat Days Till July 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X