Home
Mobile

6 வகை ஆஃபர்.. இலவச இயர்பட்ஸ்.. விற்பனையை ஆரம்பித்த புதிய OnePlus போன்.. மொத்த இந்தியாவும் ஆர்டர் போடுமே!

இந்த 2024 ஆம் ஆண்டில், இந்தியர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸின் புதிய மிட்-ரேன்ஜ் மாடலான ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி-யும் ஒன்றாகும். அப்படியான ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (பிப்.6) மதியம் 12 மணி முதல் தொடங்குகிறது.

ஒன்பிளஸ் இந்தியா இணையதளம் (OnePlus India website) மற்றும் அமேசான் இந்தியா (Amazon India) வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன், இந்த ஸ்மார்ட்போனின் மீது அறிவிக்கப்பட்டுள்ள 6 வகையான ஃபர்ஸ்ட் டே சேல் ஆஃபர்களையும் (First Day Sale Offers) கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

6 வகை ஆஃபர்களுடன் விற்பனையை ஆரம்பித்த OnePlus 12R போன்!

ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் மீது அறிவிக்கப்பட்டுள்ள 6 வகையான விற்பனை சலுகைகள்: நீங்கள் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு (ICICI credit card) அல்லது ஒன்கார்டு (OneCard) பயன்படுத்தி ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனை வாங்கினால், உங்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த முதல் 12 மணி நேரத்திற்குள் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.4999 மதிப்புள்ள ஒன்பிளஸ் பட்ஸ் இஸட்2 (OnePlus Buds Z2) முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

ஒன்பிளஸ் நிறுவனம் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே, ஒன்பிளஸ் பட்ஸ் இசட் 2 மாடலை இலவசமாக வழங்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும். அதாவது முதல் 12 மணிநேரத்திற்கு உள்ளாகவே இந்த சலுகை தீர்ந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்று அர்த்தம். இந்த சலுகை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை (First come first serve) என்கிற அடிப்படையில் இருக்கும்.

6 வகை ஆஃபர்களுடன் விற்பனையை ஆரம்பித்த OnePlus 12R போன்!

அடுத்ததாக, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனை வாங்கும் போது, ​​வாடிக்கையாளர்கள் ரூ.2,250 வரை ஜியோ பிளஸ் நன்மைகளை (Jio Plus benefits) பெறுவார்கள். இதில் ரூ.599 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பில்லிங் சைக்கிளுக்கு ரூ.150 தள்ளுபடி (Rs.150 Offer Per Billing Cycle) உட்பட பல நன்மைகள் அடங்கும். மேலும் ஒன்பிளஸ் 12ஆர்-ஐ வாங்கும் போது ப்ரொடெக்ஷன் பிளானில் (Protection Plan) 50% தள்ளுபடியும் கிடைக்கும்.

இதுதவிர்த்து ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூகுள் ஒன் சேவைக்கான (Google One Service) ஆறு மாத சந்தாவையும், யூட்யூப் பிரீமியம் (YouTube Premium) சேவைக்கான மூன்று மாத சந்தாவையும் பெறுவார்கள். கடைசியாக ஒன்பிளஸ் இந்தியா இணையதளத்தின்படி, ஒன்பிளஸ் 12ஆர் வழியாக ரெட் கேபிள் கஸ்டமர்களாக (Red Cable Customers) இணையும் வாடிக்கையாளர்ளுக்கு ஆர்சிசி லிங்க்டு டிவைஸ் நன்மைகளும் (RCC Linked Device Benefits) கிடைக்கும்.

6 வகை ஆஃபர்களுடன் விற்பனையை ஆரம்பித்த OnePlus 12R போன்!

ஆர்சிசி லிங்க்டு டிவைஸ் நன்மைகளின் கீழ் ஒன்பிளஸ் ஆடியோவிற் கு (OnePlus Audio) ரூ.1,200 வரையிலான கூப்பனும், ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) டேப்லெட்டிற்கு ரூ.3,000 வரையிலான கூப்பனும் கிடைக்கும். இப்படியாக ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் முதல் நாள் விற்பனையின் போது, மொத்தம் 6 வகையான சலுகைகள் அணுக கிடைக்கும்.

இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் விலை: ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், அதேசமயம் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.45,999 க்கும் வாங்க கிடைக்கும். இது கூல் ப்ளூ (Cool Blue) மற்றும் ஐயர்ன் க்ரே (Iron Grey) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
6 First Sale Offers Every Indians Should Know Before Buying OnePlus 12R Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X