Home
Mobile

போனா வராது.. வெறும் ரூ.5129 தான்.. மிஸ் பண்ண கூடாத 6 மொபைல் ஆஃபர்கள்.. அசத்தும் Amazon Prime Day விற்பனை!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சிறப்பு விற்பனைகளில் ஒன்றான ப்ரைம் டே விற்பனை (Prime Day Sale) ஜூலை 15, 16 ஆம் தேதிகளில் நடக்கிறது. வழக்கம் போல இம்முறையும் பல வகையான தயாரிப்புகளின் மீது "ஆஃபர் மழை" பொழிகிறது!

ஒருவேளை உங்கள் ஒட்டுமொத்த கவனமும் மொபைல் ஆஃபர்கள் மீது மட்டுமே உள்ளதென்றால், தயாராக இருங்கள் வெறும் ரூ.5,129 முதல் உங்களால் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க முடியும். ஜூலை 15 நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கும் ப்ரைம் டே விற்பனையில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத 6 பெஸ்ட் ஸ்மார்ட்போன் டீல்கள் (Best Smartphone Deals) இதோ:

Amazon Prime Day விற்பனையில் மிஸ் பண்ண கூடாத 6 மொபைல் ஆஃபர்கள்!

நோக்கியா சி12 (NOKIA C12): ஆண்ட்ராய்டு 12 கோ ஓஎஸ், 2ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், சிங்கிள் சார்ஜில் 2 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் பேட்டரி லைஃப்பை வழங்கும் இந்த பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன், அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது ரூ.5,129 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

ரெட்மி ஏ2 (Redmi A2): நோக்கியா சி12-ஐ போலவே.. ஆனால் வேறொரு பிராண்டின் பட்ஜெட் போனை தேடுபவர்கள் ரெட்மி ஏ2-வை கருத்தில் கொள்ளலாம். மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட், ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 2ஜிபி ரேம் + 32ஜிபிஇன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் இந்த போன் ப்ரைம் டேவின் போது ரூ.5,699க்கு கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்34 (Samsung Galaxy M34): இது மிகவும் சமீபத்தில் அறிமுகமான மிட்-ரேன்ஜ் மாடலாகும். எக்ஸினோஸ் 1280 சிப்செட், 120ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வரும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அமேசான் ப்ரைம் டே விற்பனையில் ரூ.16,999 முதல் வாங்க கிடைக்கும்.

லாவா அக்னி 2 (Lava Agni 2): கர்வ்டு டிஸ்பிளே, பிரீமியம் ஃபீல் மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸை தேடுபவர்கள் லாவா அக்னி 2 மாடலை கருத்தில் கொள்ளலாம். மீடியாடெக் டைமன்சிட்டி 7050, 256ஜிபி ஸ்டோரேஜ், கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ப்ரைம் டே விற்பனையின் போது ​​ரூ.20,999க்கு கிடைக்கும்.

ரியல்மி நார்சோ 60 சீரீஸ் (Realme Narzo 60 Series): கடந்த வாரம் அறிமுகமான ரியல்மி நார்சோ 60 மற்றும் ரியல்மி நார்சோ 60 ப்ரோ ஆகிய இரண்டுமே அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது வாங்க கிடைக்கும். இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே டைமன்சிட்டி 7050 சிப்செட் மூலம் இயங்குகின்றன.

மேலும் ரியல்மி 11 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போலவே வேகன் லெதர் பேக் டிசைனை பெற்றுளள்ன. 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவை வழங்கும் 6.7-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ரூ.23,999 முதல் வாங்க கிடைக்கும்; சில வங்கி சலுகைகள் மூலம் இந்த ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்கலாம்.

ஐக்யூ நியோ 7 ப்ரோ (iQOO Neo 7 Pro): மிகவும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், இந்தியாவில் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை கொண்ட ஸ்மார்ட்போனாகும். இது அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
6 Best Smartphone Deals Offers Discounts on Amazon Prime Day Sale 2023 July 15 and July 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X