Home
Mobile

சொல்லவே இல்ல.. Flipkart-ல் சத்தமின்றி நடக்கும் சிறப்பு விற்பனை.. 6 போன்கள் மீது அடேங்கப்பா ஆஃபர்!

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) சத்தமில்லாமல் ஒரு புதிய சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் சேல் (Flipkart Electronics Sale) என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையானது வருகிற மே 29 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவொரு எலக்ட்ரானிக்ஸ் சேல் ஆக இருந்தாலும் கூட - சுவாரசியமாக - சில அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் மீதான ஆஃபர்களையும் வழங்குகிறது. ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்சல் தொடங்கி சாம்சங் கேலக்ஸி, போக்கோ வரையிலாக எந்தெந்த போன்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்கிற விவரங்கள் இதோ:

Flipkart-ல் சத்தமின்றி நடக்கும் சிறப்பு விற்பனை!

ஆரம்பமே அதிரடி என்பது போல.. சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a) மீது பிளிப்கார்ட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின்கீழ் ரூ.43,999 க்கு அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 7ஏ மாடலை ரூ.39,999 க்கு வாங்க முடியும். இதற்காக நீங்கள் எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்த வேண்டி இருக்கும்.

அடுத்ததாக இந்தியாவில் அறிமுகமான இன்னொரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் உள்ளது. அது ரூ.29,999 க்கு அறிவிக்கப்பட்ட போக்கோ எஃப்5 (Poco F5) மாடலாகும். இது பிளிப்கார்ட் வழியாக தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எச்டிஎப்சி அல்லது ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் இந்த போனை ரூ.26,99 9க்கு வாங்க முடியும்.

இதேபோல், விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக, சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எக்ஸ்90 (Vivo X90) மீதும் பிளிப்கார்ட் சலுகை கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.59,999 ஆகும். ஆனால் நீங்கள் ஐசிஐசிஐ அல்லது எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால், விவோ எக்ஸ்90-ஐ ரூ.56,499 க்கு சொந்தமாக்க முடியும்.

ஒருவேளை பிக்சல் 7ஏ வாங்கும் அளவிற்கு உங்களிடம் [பட்ஜெட் இல்லையென்றால் நீங்கள் பிக்சல் 6ஏ (Pixel 6a) மாடலை வாங்கலாம். ஏனெனில் இது ரூ.15,000 என்கிற மிகப்பெரிய தள்ளுபடி விலையின் கீழ் கிடைக்கிறது. எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியை பெறலாம். இப்படியாக பிக்சல் 6ஏ-வின் விலையை ரூ.27,999 ஆக குறைக்க முடியும்.

இந்த பட்டியலில் அடுத்ததாக உள்ள ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் (Samsung Galaxy S22 Plus). புதிதாக அறிமுகமானா எஸ்23 பிளஸை வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டு அறிமுகமான எஸ்22 பிளஸ் மாடலை கருத்தில் கொள்ளலாம். ஏனென்றால் பிளிப்கார்ட்டில் இது ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் எஸ்22 பிளஸ் மாடலின் இறுதி விலையை ரூ.52,499 ஆக குறைக்க முடியும். நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை நிர்ணயம் ரூ.84,999 ஆக இருந்தது.

இந்த பட்டியலில் கடைசியாக உள்ளது ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13) மாடலாகும்.இது ரூ.61,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இதே மாடல் ஆப்பிளின் ஆன்லைன் இந்தியா ஸ்டோரில் ரூ.69,900க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது பிளிப்கார்ட் வலைத்தளமானது ரூ.7,901 என்கிற பிளாட் தள்ளுபடி வழங்குகிறது. எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தினால் ஐபோன் 13-ஐ ரூ.59,999க்கு வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
6 Best Mobile Phone Offers in Flipkart Electronics Sale 2023 Which Ends on May 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X