தவணை முறை எதுக்கு? மொத்த விலையே ரூ.11,999 மட்டும் தான்! Tecno Pova 4 விற்பனை தொடக்கம்..

|

Tecno Pova 4 ஸ்மார்ட்போனானது கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா மூலமாக விற்பனைக்கு வந்திருக்கிறது. பக்கா பட்ஜெட் விலை 4ஜி போன் இதுவாகும். இடைநிலை 4ஜி போனாக இருக்கும் இது மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் சிறந்த கேமிங் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

Tecno Pova 4 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Tecno Pova 4 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Tecno Pova 4 இன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.11,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா தளம் மூலமாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது கிரையோலைட் ப்ளூ மற்றும் யுரேனோலித் க்ரே வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி

மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி

Tecno Pova 4 ஸ்மார்ட்போனானது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக போவா 4 அறிமுகமாகி இருக்கிறது. முந்தைய மாடலைவிட பல மேம்பட்ட அம்சங்கள் இதில் இருக்கிறது. TSMC இன் 6nm செயல்முறையை அடிப்படையாகக் கொண்டு மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது இந்த ஸ்மார்ட்போன். டெக்னோ போவா 4 பேனலின் பின்புறத்தில் பளபளப்பான ஆதரவு கொண்ட டைமண்ட் கட் வடிவமைப்பு இருக்கிறது.

பின்புறத்தில் டூயல் ரியர் கேமராக்கள்

பின்புறத்தில் டூயல் ரியர் கேமராக்கள்

Tecno Pova 4 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் ரியர் கேமராக்கள் இருக்கிறது. ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. வாட்டர் டிராப் நாட்ச் ஆதரவுடன் கூடிய செல்பி ஷூட்டர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

Tecno Pova 4 ஸ்மார்ட்போனில் பெரிய அளவிலான 6.82 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதில் டூயல் ரியர் கேமரா அம்சம் இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செகண்டரி ஷூட்டர் என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 6000 எம்ஏஎச் பேட்டரி உடன் கூடிய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே

வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே

Tecno Pova 4 ஸ்மார்ட்போனானது 6.82 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1640 × 720 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரெட் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்தைக் கொண்டுள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் ஆதரவு கொண்ட செல்பி ஷூட்டர் இதில் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12

ஆண்ட்ராய்டு 12

இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான HiOS 12 மூலம் இது இயக்கப்படுகிறது.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

கேமராக்களை பொறுத்தவரை, டெக்னோ போவா 4 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 50 எம்பி முதன்மை கேமரா உடன் கூடிய ஏஐ லென்ஸ் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனில் 8 எம்பி ஸ்னாப்பர் வழங்கப்பட்டிருக்கிறது.

6000mAh பேட்டரி

6000mAh பேட்டரி

4ஜி, டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இதில் இருக்கிறது. 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 6000mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
6.8 Inch LCD Display, 50MP Primary Camera's Tecno Pova 4 Smartphone Sale Start in India: Don't Miss it

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X