6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் Tecno Spark Go Plus ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
டெக்னோ ஸ்பார்க் நிறுவனம் இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக பட்ஜெட் விலையில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் திர்மானம்மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

32ஜிபி உள்ளடக்க மெமரி
டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா வசதி
இந்த ஸ்மார்போனின் பின்புறம் 8எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமராஇ எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட்
இந்த டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 கோஇயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

பேட்டரி
டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம்ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ் விலை
டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலையைப் பொறுத்தவரை ரூ.6,299-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








