Home
Mobile

சாம்சங் முதல் ரியல்மி வரை..ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் 5G போன்கள்.. இதோ பட்டியல்.!

தற்போது இந்திய சந்தையில் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சியோமி, சாம்சங், ஒன்பிளஸ் நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

அதுவும் தற்போது பல நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளன என்று தான் கூறவேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரு.15,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் முதல் ரியல்மி வரை! ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் 5G போன்கள்!

சாம்சங் கேலக்ஸி எம்15ஜி: 4ஜிபி ரேம் மற்றும 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.14,990-விலையில் வாங்க முடியும். மேலும் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, எக்ஸிநோஸ் 1330 ஆக்டோ-கோர் பிராஸசர் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ டி2எக்ஸ் 5ஜி: 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி 6020 பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா ஜி62 5ஜி: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி62 போனின் விலை ரூ.15,499-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும். மேலும் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

போக்கோ எம்4 5ஜி: 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். பின்பு 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 700 பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் போக்கோ எம்4 5ஜி போன் வெளிவந்துள்ளது.

சாம்சங் முதல் ரியல்மி வரை! ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் 5G போன்கள்!

ரெட்மி நோட் 12 5ஜி: 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 5ஜி போனின் விலை ரூ.15,499-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இன்னும் கம்மி விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட், 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா,13எம்பி செல்பி கேமரா, 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி 9ஐ: 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 9ஐ 5ஜி போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. குறிப்பாக 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி 810 5ஜி பிராசஸர், 5000 பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
5G Smartphones from Leading Companies Under Rs.15,000: Here's the List! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X