ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதேபோல் சியோமி, ரியல்மி நிறுவனங்கள் அதிகளவில் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம்
செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்தியாவில் ரூ.15000-க்கு கீழ் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10டி 5ஜி
ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,999-விலையில் கிடைக்கும். பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி மாடல் ஆனது ரூ.16,499-விலையில் கிடைக்கும். குறிப்பாக மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ53எஸ் 5ஜி
இந்தியாவில் ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14990-விலையில் கிடைக்கிறது. OPPO A53s 5G ஆனது ஒரு நிலையான 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய HD பிளஸ் தெளிவுத்திறனுடன் செயல்படும் 6.5 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பிராண்டின் கூற்றுப்படி, இந்த டிஸ்பிளே 480 நைட்ஸ் பிரகாசத்துடன் வருகிறது. தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்காக, சாதனம் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. OPPO A53s 5G சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயங்குகிறது.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி
இந்தியாவில் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின்
விலை ரூ15,999-ஆக உள்ளது 6.5-இன்ச் டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.

ரியல்மி 8 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,499-விலையில் கிடைக்கும். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 5ஜி மாடல் ரூ.15,499-விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி ரியர் கேமரா, மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் உள்ளிட்டபல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications