Just In
- 2 hrs ago
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- 3 hrs ago
குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா! 2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?
- 15 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 16 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
Don't Miss
- News
வடக்கில் செழிப்பு.. தெற்கில் ஒன்னுமில்ல! வெற்றுப்பெருமை, ஏமாற்றம் நிறைந்த பட்ஜெட் -கமல்ஹாசன் காட்டம்
- Movies
நானும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்திச்சிருக்கேன்.. ஓபனாக சொன்ன நயன்தாரா.. ஷாக்கான ஃபேன்ஸ்!
- Finance
அதானி அதிரடி முடிவு.. FPO ரத்து.. பணத்தை திரும்ப முதலீட்டாளர்களுக்கு ஒப்படைக்க முடிவு.. ஏன்?
- Automobiles
"மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு..." என ஓலாவை ஓரங்கட்டப் போகும் ஏத்தர்... ஒரே ஆண்டில் 330 சதவீத வளர்ச்சியா!
- Sports
ஓ இதுதான் ட்ரிப்பிளா திருப்பி குடுக்குறதா? சோதித்து பார்த்த நியூசி,.. சூர்யகுமார் தரமான பதிலடி!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2023-ல் நீங்கள் வாங்க வேண்டிய பெஸ்ட் 5G போன்கள்.! லிஸ்ட்ட பார்க்காம வாங்கிடாதீங்க.!
கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகை கொண்டாட்டங்கள் இப்போதே களைக்கட்ட துவங்கிவிட்டன. இந்த பண்டிகை காலத்தில் உங்களுக்காக ஒரு புது 5ஜி போனை (5G Phones) நீங்கள் வாங்க விரும்பினாலோ? அல்லது உங்களுக்கு பிடித்தவர்களுக்காக ஒரு புதிய 5ஜி போனை வாங்க நினைத்தாளோ? நீங்கள் செலக்ட் செய்ய வேண்டும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் (Best 5G Smartphone) மாடல்களை தான் இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம்.

அணைத்து விலை செக்மென்ட்டிலும் வாங்க கூடிய பெஸ்ட் 5G போன்கள்.! இதோ..
மலிவு விலை 5ஜி போன்களில் (Low price 5G phones) எது சிறந்த மாடல்? பட்ஜெட் செக்மென்ட்டில் எது டாப் 5ஜி மாடல் (Budget segment top 5G phones)? பிரீமியம் 5ஜி போன்களில் (Premium 5G phones) எது பெஸ்ட் மாடல்? அல்ட்ரா-பிரீமியம் பிரிவில் (Ultra-Premium 5G Smartphones) வாங்க கிடைக்கும் மிக சிறந்த 5ஜி டிவைஸ் (Best 5G devices to buy) எது? என்பது போன்ற அனைத்து தகவலையும் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
இத்தனை பிரிவுகளின் கீழ் உங்களுக்கு வாங்க கிடைக்கும் பெஸ்டான மாடலக்ளை ஒரே இடத்தில் தொகுத்துள்ளோம். சரி, வாங்க லிஸ்டை பார்க்கலாம்.

சிறப்பான 5G சாதனங்களை வெவ்வேறு விலை வரம்புகளில் வாங்கலாமா?
டெலிகாம் ஆபரேட்டர்கள் ஏற்கனவே 5ஜியை வெளியிடத் தொடங்கியுள்ளதால், நீங்கள் 4ஜி போன்களுக்கு (4G phones) பதிலாக 5ஜி மொபைல் போன்களை (5G mobile phones) வாங்குவதும், கிஃப்ட் செய்வதும் சிறப்பானது.
பல முன்னணி பிராண்டுகள் இப்போதே நாட்டில் சிறப்பான 5G சாதனங்களை வெவ்வேறு விலை வரம்புகளில் விற்பனை செய்கின்றன.
ஒவ்வொரு விலை வரம்பிலிருந்தும் ஒன்று அல்லது இரண்டு சாதனங்களில் இங்கு கவனம் செலுத்துவோம்.

ரூ. 15,000 விலைக்குள் கிடைக்கும் மலிவு விலை 5G போன்கள்
ஒப்போ (Oppo) , சாம்சங் (Samsung), லாவா (Lava) மற்றும் பல பிராண்டுகள் 5G போன்களை ரூ.15,000 விலைக்குள் வழங்கி அசத்துகிறது. இந்த செக்மென்ட்டில் குறைவான சாதனங்களே இருக்கிறது.
அவற்றில், Samsung Galaxy M13 5G, Redmi 11 Prime 5G மற்றும் Poco M4 5G ஆகியவை சிறந்த விருப்பங்களாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் இந்தியா (Amazon India) போன்ற இ-காமர்ஸ் தளங்களிலிருந்து இந்த சாதனங்களை எளிதாக வாங்கலாம்.

இந்தியாவின் மிகவும் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் இது தான்.!
Samsung Galaxy M13 5G (4ஜிபி + 64ஜிபி) அமேசான் இந்தியாவில் ரூ.11,999க்கு விலையில் கிடைக்கிறது. Redmi 11 Prime 5G மற்றும் Poco M4 5G ஆகியவை முறையே ரூ.12,999 (4ஜிபி+64ஜிபி) மற்றும் ரூ.12,499 (4ஜிபி+64ஜிபி) இல் கிடைக்கிறது.
Lava Blaze 5G (4ஜிபி + 128ஜிபி) அமேசான் வழியாக ரூ. 10,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்தியாவின் மிக குறைந்த விலை 5ஜி போனாக இந்த மாடல் திகழ்கிறது.

பட்ஜெட் செக்மென்ட்டில் ரூ. 30,000 விலைக்குள் கிடைக்கும் 5ஜி போன்கள்
OnePlus Nord 2T 5G, OnePlus Nord CE 2 Lite 5G, Realme Narzo 50 Pro 5G மற்றும் Samsung Galaxy M53 5G ஆகியவை ரூ.30,000க்கு கீழ் உள்ள சிறந்த தேர்வுகளாக இருக்கிறது. OnePlus Nord 2T 5G (8ஜிபி +128ஜிபி) விலை ரூ.28,999 இல் தொடங்குகிறது.
OnePlus Nord CE 2 Lite 5G (6ஜிபி + 128ஜிபி) விலை ரூ.18,999 இல் வருகிறது. இதில் கிடைக்கும் OnePlus சாதனங்கள் நிறுவனத்தின் புதிய Oxygen OS 13 உடன் வருகின்றது.

30,000 ரூபாய் பிரிவில் ஏராளமான 5ஜி மாடல்கள்.!
பின்னர் Realme Narzo 50 Pro 5G மற்றும் Samsung Galaxy M53 5G ஆகியவை முறையே ரூ.21,999 (6ஜிபி +128 ஜிபி) மற்றும் ரூ.26,999 (8ஜிபி +128ஜிபி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் இந்த 30,000 ரூபாய் பிரிவில் கிடைக்கிறது.
இங்கு நாங்கள் சில குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம் என்பது கவனிக்கத்தக்கது. சரி, அடுப்படியாக பிரீமியம் ஸ்மார்ட்போன் பட்டியலை பார்க்கலாம்.

பிரீமியம் பிரிவில் கிடைக்கும் பெஸ்ட் 5G ஸ்மார்ட்போன்கள்
30,000 ரூபாய்க்கு மேல் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்களும் பிரீமியம் ஸ்மார்ட்போன் (Premium smartphone) அல்லது ஹாஃப் பிரீமியம் ஸ்மார்ட்போன் (half-premium smartphone) என்று அழைக்கப்படுகிறது.
இந்த பிரிவில் OnePlus 10T 5G, OnePlus 10 Pro 5G, Samsung Galaxy S22, Samsung Galaxy S21 FE 5G மற்றும் iPhone 14 ஆகியவற்றை நீங்கள் சிறந்த 5ஜி சாதனங்களாக வாங்கலாம்.
இதன் விலை புள்ளிகள் பட்ஜெட் செக்மென்ட்டிற்கும், அல்ட்ரா பிரீமியம் செக்மென்ட்டிற்கும் இடையில் உள்ளதினால் சிறந்த அம்சங்களை நீங்கள் பெறலாம்.

பிரீமியம் தரத்தில் பெஸ்ட்டான 5ஜி போன்கள் வாங்க இந்த மாடலை பாருங்க.!
OnePlus 10T 5G விலை ரூ. 44,999 (8ஜிபி + 128ஜிபி), OnePlus 10 Pro 5G விலை ரூ.61,999 (8ஜிபி + 128 ஜிபி), Samsung Galaxy S22 5G விலை ரூ. 52,999 (8ஜிபி + 128 ஜிபி), Samsung Galaxy S21 FE 5G விலை ரூ. 32,990 (8ஜிபி+128ஜிபி), மற்றும் ஐபோன் 14 ரூ.75,990 (128ஜிபி) என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அமேசான் இந்தியாவிலிருந்து வாங்க கிடைக்கிறது.

அல்ட்ரா பிரீமியம் செக்மென்ட் கீழ் கிடைக்கும் பெஸ்ட் 5G போன்கள்
நீங்கள் அல்ட்ரா பிரீமியம் பிரிவில் 5G போன்களைத் (Ultra-Premium 5G phones) தேடுகிறீர்களானால், உங்களுக்கு மூன்று விருப்பங்கள் மட்டுமே இருக்கும் - iPhone 14 Pro, iPhone 14 Pro Max மற்றும் Samsung Galaxy S22 Ultra மாடல்கள் மட்டுமே சிறந்த ஒப்பந்தங்களாக இருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ ரூ. 1,29,900 (128 ஜிபி) மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ரூ. 1,39,900 (256 ஜிபி) இல் தொடங்குகிறது.

5G போன்களை கிஃப்ட் செய்தால் எப்படி இருக்கும்?
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா விலை ரூ.1,09,999 (12ஜிபி+256ஜிபி) இல் தொடங்குகிறது.சாம்சங் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா அறிமுகத்துடன் சாம்சங் அதன் முதன்மைத் தொடரை விரைவில் புதுப்பிக்கப்படும்.
எனவே, சாம்சங் கேலக்ஸி எஸ் 22 அல்ட்ராவைப் பெறுவதற்கு முன்பு கவனமாக சிந்தியுங்கள், அதன் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்.
இந்த மாடல்கள் எல்லாம் இப்போது இந்தியாவில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5ஜி போன் மாடல்களாக திகழ்கிறது. நீங்கள் இந்த புத்தாண்டு அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு யாருக்கும் புது போன் கிப்ட் செய்ய விரும்பினால் இந்த மாடல்களை கருத்தில்கொள்ளலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470