அவசரப்படுத்தும் 5G அறிமுகம்.. பட்ஜெட் வாசிகளுக்கு இருக்கும் 5 ஆப்ஷன்ஸ்!

|

கொஞ்சம் அவசர அவசரமாக.. அக்டோபர் 1, 2022 அன்று இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமாக உள்ள நிலைப்பாட்டில், இன்னமும் கூட 5G நெட்வொர்க்கை ஆதரிக்கும் ஒரு ஸ்மார்ட்போன் உங்களிடம் இல்லையென்றால்..

கவலையை விடுங்கள்! உங்களுக்கு 1 அல்ல.. மொத்தம் 5 ஆப்ஷன்ஸ் இருக்கிறது.

உங்கள் நேரத்தையும், உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்துவதை விட எங்களுக்கு வேறு என்ன வேலை? இந்தியாவில் ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களும், அவைகளை ஏன் நம்பி வாங்கலாம் என்கிற காரணங்களும்.. இதோ!

01. சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13 5G)

01. சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13 5G)

- பலருக்கும் போதுமான பெரிய 5,000mAh பேட்டரி
- நல்ல 6.5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே (HD+ ரெசல்யூஷன்)
- பட்ஜெட் போனாக இருந்தாலும் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்பை பயன்படுத்துகிறது.
- விலைக்கு ஏற்ற சாஃப்ட் ஆன பெர்ஃபார்மென்ஸ்
- பாக்ஸில் 15W சார்ஜர் வருகிறது
- ஓரளவு நல்ல புகைப்படங்களை பதிவு செய்யும் கேமராக்கள்

5G கட்டணம்: அக்.1 முதல் ஒவ்வொரு ரீசார்ஜ்-க்கும் எவ்வளவு செலவு ஆகும்?5G கட்டணம்: அக்.1 முதல் ஒவ்வொரு ரீசார்ஜ்-க்கும் எவ்வளவு செலவு ஆகும்?

02. ரெட்மி நோட் 11டி 5ஜி (Redmi Note 11T 5G)

02. ரெட்மி நோட் 11டி 5ஜி (Redmi Note 11T 5G)

- இதுவும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது; ஆனால் ரீடெயில் பாக்ஸில் 33W சார்ஜர் இருக்கும்.
- அதிக ரெசல்யூஷன், நல்ல ரெஃப்ரெஷ் ரேட் உடனான ஒரு பெரிய 6.6 இன்ச் டிஸ்பிளே
- பெர்ஃபார்மென்சில் எந்த ஏமாற்றமும் இருக்காது; ஏனென்றால், இது MediaTek Dimensity 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
- டீசன்ட் ஆன டிசைன்
- நல்ல பில்ட் குவாலிட்டி
- தெளிவான புகைப்படங்களை வழங்கும் கேமராக்கள்
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் கவனிக்கத்தக்கது.

03. போக்கோ எம்4 5ஜி (Poco M4 5G)

03. போக்கோ எம்4 5ஜி (Poco M4 5G)

- ரூ.11,000 க்குள் (தள்ளுபடி விலையில்) வாங்க கிடைக்கும் ஒரு 5ஜி போன்
- விலைக்கு ஏற்ற பெர்ஃபார்மென்ஸ்; பின்னடைவு எதுவும் இருக்காது (மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC)
- 5,000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
- "போதுமான" கேமரா செட்டப்
- 6.58-இன்ச் என்கிற அளவிலான பெரிய ஃபுல் HD+ டிஸ்பிளே

வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!

04. ஐக்யூ இசட்6 லைட் (iQOO Z6 Lite 5G)

04. ஐக்யூ இசட்6 லைட் (iQOO Z6 Lite 5G)

- இது புதிய Qualcomm Snapdragon 4 Gen 1 ப்ராசஸரை பயன்படுத்துகிறது
- தினசரி பயன்பாட்டில், பின்னடைவு இல்லாத செயல்திறனை வழங்கும்
- மேலே குறிப்பிட்டுள்ள எந்த போன்களிலும் இல்லாத 120Hz டிஸ்ப்ளே
- வழக்கமான 5,000mAh பேட்டரி
- இது 2 வருட மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் மற்றும் மூன்று வருட செக்யூரிட்டி பேட்ச்களை பெறும்.

05. ரியல்மி 9ஐ (REALME 9i)

05. ரியல்மி 9ஐ (REALME 9i)

- பட்டியலின் கடைசி இருந்தாலும் கூட, இது ஒரு ஆல் ரவுண்டர் ஸ்மார்ட்போன் ஆகும்.
- பெரிய 6.6 இன்ச் FHD+ 90Hz டிஸ்பிளே
- விலைக்கு ஏற்ற பெர்ஃபார்மென்ஸை உறுதி செய்யும் டைமன்சிட்டி 810 SoC ப்ராசஸர்
- 18W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கிட்டத்தட்ட அனைவர்க்கும் போதுமான பெரிய 5,000mAh பேட்டரி
- கேமராக்களை பொறுத்தவரை கொஞ்சம் மோசம் தான்.

ஒருவேளை உங்களுக்கு 5ஜி உடன் சேர்த்து கேமராக்களும் முக்கியம் என்றால் நீங்கள் Samsung Galaxy M13 அல்லது Redmi Note 11T-ஐ கருத்தில் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
5G Launch in India On October 1 Top 5 Best 5G Phones Under Rs 15000 To Choose

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X