தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. அப்போ ரூ.45,000.. இப்போ ரூ.25,000 தான்.. 30X ஸ்பேஸ் ஜூம்.. OIS கேமரா.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி ரூ.49,999 பட்ஜெட்டில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G) போனானது, இப்போது பாதிக்குப்பாதி விலையில் கிடைக்கிறது. அதாவது, வெறும் ரூ.25,000 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே, டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ் கேமரா, 30X ஜூமிங் போன்ற பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ள இந்த சாம்சங் கேலக்ஸி மாடலின் முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ், 3X ஆப்டிகல் ஜூமிங், 30X ஸ்பேஸ் ஜூமிங் போன்ற அல்ட்ரா பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி போனானது, இந்திய கேமரா பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. கூடவே, ஸ்னாப்டிராகன் 888 வெர்ஷனில் அப்கிரேட் செய்யப்பட்டு, பர்ஃபாமென்ஸில் பின்னியது.

இதுபோக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்டன் டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் கொண்ட சரவுண்ட் சவுண்ட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பவர் ஷேரிங் போன்ற பீச்சர்களிலும் தட்டித் தூக்கியது. இவ்வளவு பிரீமியமாக இருந்ததால், ரூ.45,000 பட்ஜெட்டில் வெளியானது. ஆனால், இப்போது நம்ப முடியாத விலை குறைப்பில் ஆர்டருக்கு கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy S21 FE 5G Specifications): இந்த சாம்சங்கில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்ட 6.4 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்டிருக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. இந்த போனில் அப்கிரேட் செய்யப்பட்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5என்எம் (Octa Core Qualcomm Snapdragon 888 5nm) சிப்செட் உள்ளது. சாம்சங்கின் ஒன் யுஐ 4 (One UI 5) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. அட்ரினோ 660 ஜிபியு (Adreno 660 GPU) கிராபிக்ஸ் உள்ளது.
12 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் பிடிஏஎப் (PDAF) ஆட்டோபோகஸ் வருகிறது. 3X ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) மற்றும் 30X ஸ்பேஸ் ஜூம் (Space Zoom) செய்து கொள்ளலாம்.
டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ் (Dual Pixel Autofocus) வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Scanner), டைப்-சி ஆடியோ (Type-C Audio) உள்ளது. இந்த சாம்சங் போனில் IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது 25W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.49,999ஆக இருந்தது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.26,901 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், ரூ.1500 மதிப்பில் உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,401 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கி கொள்ளலாம். எச்டிஎப்சி கார்டுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications