ரூ.1000, ரூ.2000 இல்ல.. முழுசா ரூ.43,000 விலை குறைப்பை பெற்ற பவர்ஃபுல் ஆன Samsung போன்.. என்ன மாடல்?
பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) தொடர்ச்சியான முறையில் மொபைல் போன்கள் மீதான ஸ்பெஷல் ஆஃபர்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அதனொரு பகுதியாக சாம்சங் (Samsung) நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் ஒரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது முழுதாக 57% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G) மாடலாகும். தற்போது இதன் மீது ரூ.35,000 என்கிற நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. கூடவே இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனின் மீது எக்ஸ்சேன்ஜ் சலுகை மற்றும் சில பிரத்யேக வங்கி சலுகைகளும் கூட கிடைக்கிறது.

நினைவூட்டும் வன்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ.74999 ஆகும். பிளிப்கார்ட்டின் 57% என்கிற நேரடி தள்ளுபடிக்கு பின்னர் வெறும் ரூ.31999 க்கு வாங்க கிடைக்கிறது. இதுவொரு பிளாட் ஆஃபர் ஆகும். அதாவது இதற்காக நீங்கள் எந்தவொரு எக்ஸ்சேன்ஜ் சலுகையையும் அல்லது வங்கி சலுகையையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஒருவேளை நீங்கள் எக்ஸ்சேன்ஜ் சலுகை மற்றும் வங்கி சலுகையை பயன்படுத்தினால், சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை உங்களால் இன்னும் குறைக்க முடியும். எக்ஸ்சேன்ஜ் சலுகையை பொறுத்தவரை பிளிப்கார்ட் வலைத்தளமானது ரூ.36,600 வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியை வழங்குகிறது.
இதற்காக நீங்கள் (நன்றாக வேலை செய்யும்) உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய வேண்டி இருக்கும். மேலும் உங்களுக்கு கிடைக்கும் எக்ஸ்சேன்ஜ் வேல்யூ ஆனது முழுக்க முழுக்க உங்களுடைய பழைய போனின் மாடல் மற்றும் அது வேலை செய்யும் நிலையைபொறுத்ததே ஆகும்.
வங்கி சலுகைகளை பொறுத்தவரை, சாம்சங் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு வழியாக சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் 10% கேஷ்பேக்கை பெறலாம். ஒருவேளை நீங்கள் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்ட்டை பயன்படுத்தினால் 5% என்கிற கேஷ்பேக்கை பெறலாம்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டை (Snapdragon 888 Chipset) பேக் செய்கிறது.
டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 12எம்பி + 12எம்பி + 8எம்பி கேமராக்களை கொண்டுள்ளது முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 4500mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








