Home
Mobile

Samsung Republic Day Offer: 57% தள்ளுபடி.. 1 இல்ல 2 இல்ல.. Galaxy S23 உட்பட மொத்தம் 14 போன்கள்.. இதோ லிஸ்ட்!

2024-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு சாம்சங் நிறுவனமானது கிராண்ட் ரிபப்ளிக் டே சேல் என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதன் கீழ் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டிவிகள் உட்பட பல்வேறு சாம்சங் தயாரிப்புகளின் மீது ஆஃபர்கள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சாம்சங்கின் இந்த கிராண்ட் ரிபப்ளிக் டே விற்பனையின் (Samsung Grand Republic Day Sale) போது கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மீது 57% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன மாடல்கள் மீது ஆஃபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட்கள் கிடைக்கிறது? வேறு என்னென்ன தயாரிப்புகள் மீது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

Samsung Republic Day Offer: 57% தள்ளுபடி.. இதோ லிஸ்ட்!

சாம்சங் கிராண்ட் ரிபப்ளிக் சலுகைகள் எங்கெல்லாம் கிடைக்கும்? சாம்சங்.காம் (Samsung.com), சாம்சங் ஷாப் ஆப் (Samsung Shop App) மற்றும் சாம்சங் எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்ஸ் (Samsung Exclusive Stores) வழியாக சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்கினால் 57% வரையிலான தள்ளுபடிகளை பெற முடியும். கூடுதலாக எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் மற்றும் பிற முன்னணி வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் 22.5% வரையிலான கேஷ்பேக் (ரூ.25,000 வரை) கிடைக்கும்.

என்னென்ன சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் மீது சலுகைகள் கிடைக்கிறது? சாம்சங்கின் இந்த சிறப்பு விற்பனையின் போது, கேலக்ஸி ஏ சீரிஸ், எம் சீரிஸ், எஃப் சீரிஸ், எஸ் சீரிஸ் மற்றும் கேலக்ஸி இசட் சீரிஸின் கீழ் மொத்தம் 14 ஸ்மார்ட்போன்கள் மீது 57% வரை தள்ளுபடி அணுக கிடைக்கும்.

Samsung Republic Day Offer: 57% தள்ளுபடி.. இதோ லிஸ்ட்!

சரியாக சொல்ல வேண்டும் என்றால் கேலக்ஸி எஸ்21 எப்இ (Galaxy S21 FE), கேலக்ஸி எஸ்23 (Galaxy S23), கேலக்ஸி எஸ்23 எப்இ (Galaxy S23 FE), கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Galaxy Z Fold 5), கேலக்ஸி இஸட் பிளிப் 5 (Galaxy Z Flip 5) மீது டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

மேலும் கேலக்ஸி ஏ15 5ஜி (Galaxy A15 5G), கேலக்ஸி எஸ்34 5ஜி (Galaxy A34 5G), கேலக்ஸி ஏ54 5ஜி (Galaxy A54 5G), கேலக்ஸி ஏ25 5ஜி (Galaxy A25 5G), கேலக்ஸி எம்34 (Galaxy M34), கேலக்ஸி எம்14 (Galaxy M14), கேலக்ஸி எப்34 (Galaxy F34), கேலக்ஸி எப்14 (Galaxy F14) மற்றும் கேலக்ஸி எம்04 (Galaxy M04) மீதும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

Samsung Republic Day Offer: 57% தள்ளுபடி.. இதோ லிஸ்ட்!

சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் மீதான சலுகைகள்: ஒருவேளை நீங்கள் புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவிகளின் மீதான சலுகைகளை தேடினால், சாம்சங்கின் பிரீமியம் மற்றும் லைஃப்ஸ்டைல் டிவி ​​மாடல்களை வாங்கும் நுகர்வோர் ரூ.15,250 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் நன்மையுடன் 48% வரையிலான தள்ளுபடியையும் பெறலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நியோ க்யூஎல்இடி (Neo QLED) மற்றும் க்யூஎல்இடி டிவி மாடல்களை வாங்கும் நுகர்வோர்கள், பின்வருவனவற்றில் ஒன்றிலிருந்தும் ஒரு நிச்சயமான சிறப்பு பரிசைப் பெறுவார்கள் - ரூ.1,24,990 மதிப்புள்ள கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Galaxy S23 Ultra) அல்லது ரூ.69,990 மதிப்புள்ள 50-இன்ச் செரிஃப் டிவி அல்லது ரூ.38,990 மதிப்புள்ள சவுண்ட்பார் (Q700C / C450).

சாம்சங் லேப்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் வாட்சுகள் மீதான சலுகைகள்: கேலக்ஸி புக் கோ (Galaxy Book Go), கேலக்ஸி புக் 3 (Galaxy Book 3) மற்றும் கேலக்ஸி புக் 3 ப்ரோ (Galaxy Book 3 Pro) போன்ற கேலக்ஸி லேப்டாப்களை வாங்க விரும்புவோர்கள் 46% வரையிலான தள்ளுபடியை பெறலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கேலக்ஸி டேப்லெட்டுகள், வாட்சுகள் மீது 50% வரை தள்ளுபடி பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
57 percent offers on smartphones do not miss these deals in samsung grand republic day sale 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X