Home
Mobile

ஆர்டருக்கு மேல் ஆர்டர்.. ரூ.25,000 விலை குறைப்பு.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிரீமியம் சாம்சங் மாடலை பக்கா டிஸ்கவுண்ட்டில் வாங்க காத்திருக்கும் சாம்சங் பிரியர்களுக்கு சரியான நேரம் வந்துவிட்டது. ரூ.59,999 பட்ஜெட்டில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) போனானது, இப்போது வெறும் ரூ.34,998 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே, 4500mAh பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பீச்சர்களில் பின்னியெடுக்கும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் பிரியர்களுக்கான ஃபேன் எடிஷன் மாடலாக இந்த போன் வெளியாகியது. ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித் தூக்கும்படி ஏஐ பீச்சர்களுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருந்தது. இருப்பினும், விலை ரூ.59,999 பட்ஜெட்டில் இருந்ததால், டிஸ்கவுண்ட்டில் வாங்க காத்திருக்க வேண்டி இருந்தது.

ஆர்டருக்கு மேல் ஆர்டர்.. ரூ.25,000 விலை குறைப்பு.. OIS கேமரா மாடல்!

இப்போது, ரூ.25,001 விலை குறைப்புடன் அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டருக்கு வந்து சாம்சங் பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது. ஆகவே, இந்த விலையில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ மாடலில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன? பேங்க் கார்டுகள் தேவைப்படுகிறதா? விவரம் இதோ.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S23 FE Specifications): 6.4 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வருகிறது.

மேலும், இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Scanner) வருகிறது. சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 920 ஜிபியு (Samsung Xclipse 920 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்டா கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2200 4என்எம் (Octa Core Samsung Exynos 2200 4nm) சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) ஒன் யுஐ 5.1 (One UI 5.1) சப்போர்ட் வருகிறது. எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) கிடையாது. ஆகவே, டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா (Telephoto Camera) வருகிறது.

3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி வருகிறது. 10 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டுள்ளது. 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர் ஷேரிங் சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. டைப்-சி போர்ட் மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. பிரீமியம் பீச்சர்கள் கொண்ட சாம்சங் போன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வேண்டுமானால், இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ போனை தாராளமாக வாங்கலாம். இதுபோக எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
56 Percent Discount Samsung Galaxy S23 FE With 50MP Camera in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X