சூடு பிடிக்குது ஆர்டர்.. ரூ.52,000 விலை குறைப்பு.. அடிமட்ட ரேட்ல பிரீமியம் சாம்சங்.. 200MP கேமரா.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்ட் 2025 (Galaxy Unpacked 2025) நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா வெளியாக இருக்கிறது. இதனால், சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மாடல்களுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.1,24,999 பட்ஜெட்டில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா இப்போது கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலையில் கிடைக்கிறது. இந்த பிரீமியம் மாடலுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா அமேசான் விற்பனை (Samsung Galaxy S23 Ultra Amazon Sale): இந்த சாம்சங் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,24,999ஆக இருந்தது. ஆனால், இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) வெறும் ரூ.72,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.52,000 விலை குறைப்பில் இந்த போனை வாங்கி கொள்ளலாம்.

மேலும், ரூ.46,400 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த ரூ.52,000 டிஸ்கவுண்ட் விலையை பெற டெபிட் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டுகள் தேவையில்லை. நேரடியாக ரூ.72,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இவ்வளவு கம்மியான விலைக்கு கிடைக்கிறதே பீச்சர்கள் சுமாராக இருக்குமோ என்று எண்ணி விடாதீர்கள். பின்னிப்பெடல் எடுக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S23 Ultra Specifications): இந்த சாம்சங் போனில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்ட 6.8 இன்ச் (3088 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் குவாட்எச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் வருகிறது.
மேலும், கேமிங் மோட் மற்றும் 1750 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த அல்ட்ரா போனில் கேலக்ஸி 4என்எம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி (Galaxy 4nm Octa Core Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 2 வருட பழைய மாடலாக இருப்பதால் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ஒன் யுஐ 5.1 (One UI 5.1) வருகிறது.
கேமராவில் ஒன்றும் சொல்ல முடியாதபடி பீச்சர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி இருக்கின்றன. ஐசோசெல் எச்பி1 (ISOCELL HP2) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி சப்போர்ட் கொண்ட 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா + 10 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் பேக் செய்துள்ளது.
டெலிபோட்டோவிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், 3எக்ஸ் ஜூமிங் கொடுக்கிறது. ஆனால், பெரிஸ்கோப் கேமராவில் 10எஸ்க் இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 100எக்ஸ் ஸ்பேஸ் ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவில் 5000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.
12 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. IP68 ரெசிஸ்டன்ட்டை இந்த பிரீமியம் போன் கொடுக்கிறது. கிரீன், பாண்டம் பிளாக் மற்றும் கிரீம் கலர்களில் கிடைக்கிறது. ஓஎஸ் மற்றும் சிப்செட் மட்டுமே பழைய வெர்ஷனாக இருக்கிறது. கேமரா, டிஸ்பிளே போன்ற பீச்சர்களில் இப்போதும் பின்னியெடுக்கிறது.


Click it and Unblock the Notifications








