SALE-க்கு மேல SALE.. ரூ.9,889 ரேட் கட்ல SAMSUNG.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் சாம்சங் (Samsung) பிரியர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் போடும்படியான விலை குறைப்பில் சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) போன் கிடைக்கிறது. வேகன் பேக் பேனல் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த சாம்சங் போனில் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த போனுக்கு கிடைக்கும் பீச்சர்கள், விலை குறைப்பு விவரங்கள் இதோ.
சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F55 5G Specifications): இந்த சாம்சங் போனில் வேகன் லெதர் பினிஷிங் (Vegan Leather Finishing) மட்டுமல்லாமல், சட்டில் ஸ்டிச் பேட்டர்ன் (Saddle Stitch Pattern) டிசைன் கிடைக்கிறது. கூடுதலாக, லெதர் பேனல் இருந்தும் 7.8 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. மெட்டாலிங் பினிஷிங் ஃபிரேம் மற்றும் கேமரா பம்ப் கிடைக்கிறது.

இந்த டிசைனில் அப்ரிகாட் கிரஷ் (Apricot Crush) மற்றும் ரைசின் பிளாக் (Raisin Black) கலர்களில் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் அல்ட்ரா பிரீமியம் பீல் கொடுக்கும் மாடலாக இருக்கும். சாம்சங் போன்களில் டிஸ்பிளே பீச்சர்களுக்கு குறையிருக்காது. இதில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் பிளஸ் டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த மிட்-பிரீமியம் டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஒரு வருட பழைய மாடலாக இருந்தாலும், 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. அதே நேரத்தில் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி கொடுக்கிறது.
அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (4nm Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் கிடைக்கிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட். 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்கள் மார்கெட்டில் கிடைக்கின்றன. மைக்ரோஎஸ்டி பயன்படுத்தலாம்.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 5 எம்பி அல்ட்ரா-வைடு ஆங்கிள் + 2 எம்பி டெப்த் கேமராவுடன் டிரிபிள் ரியர் செட்டப் கொடுக்கிறது. வழக்கமாக இல்லாமல், இதில் 50 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது. ஒன் யுஐ 6.1 (One UI 6.1) உள்ளது.
45W சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. மேலும், IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.26,999ஆக இருக்கிறது.
ஆனால், இப்போது அமேசான் தளத்தில் ஆர்டர் செய்தால் வெறும் ரூ.17,110 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஆகவே, ரூ.9,889 விலை குறைப்பில் இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு போக ரூ.16,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. மிட்-பிரீமியம் சாம்சங் போனை பட்ஜெட்டில் வாங்க இதுவொரு நல்ல நேரமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








