அடிச்சான் பாரு சிக்சரு.. OnePlus 12 இல் இடம்பெற உள்ள 2 வேற லெவல் அப்கிரேட்.. இதுக்காகவே வெயிட் பண்ணலாம்!
ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனிற்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் எது? என்கிற கேள்விக்கு, கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே பதில் தெரியும். அது ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) ஸ்மார்ட்போன் ஆகும்.
ஒன்பிளஸ் 12 5ஜி-யின் சரியான வெளியீட்டு தேதியை (Launch Date) ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அப்படியாக சமீபத்தில் ஒரு சீன டிப்ஸ்டர், ஒன்பில்ஸ் 12 அதன் முன்னோடியான ஒன்பிளஸ் 11-ஐ விட 2 முக்கிய மேம்படுத்தல்களுடன் (2 Major Upgrades) வரும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது யூஎஸ்பி 3.2 போர்ட் (USB 3.2 Port) மற்றும் 50வாட் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு (50W Wireless Charging Support) உடன் வரும் என்று கூறப்படுகிறது. இவ்விரு அம்சங்களுமே ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் இருப்பதை விட மிகவும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களாகும்
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் யூஎஸ்பி 2.0 டைப்-சி போர்ட் (USB 2.0. Type-C Port) உள்ளது. மேலும் ஒன்பிளஸ் 11 மாடலில் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவே கிடையாது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் இவ்விரு அம்சங்கள் மட்டுமே மிகப்பெரிய அப்கிரேட்களாக இருக்கும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் இன்ஃப்ராரெட் சென்சாரும் (Infrared Sensor) இடம்பெறும். இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை டிவிக்கு ரிமோட் கண்ட்ரோலாக (TV Remote Control) பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். கூடுதலாக, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் பெரிஸ்கோப் கேமராவும் (Persicope Camera) இடம்பெற உள்ளது. கடைசியாக இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 Chipset) கொண்டு இயங்கும் என்று கூறப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 ஆனது 6.82-இன்ச் க்யூஎச்டி பிளஸ் (1440 x 3168 பிக்சல்ஸ்) கர்வ்டு லோ டெம்ப்ரேச்சர் பாலிகிரிஸ்டலின் ஆக்சைடு (LTPO - Low-temperature polycrystalline oxide) டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். பிஓஇ-ஆல் தயாரிக்கப்படவுள்ள இந்த டிஸ்பிளேவானது 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உடன் வருமென்றும் கூறப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ஓஐஎஸ்-க்கான ஆதரவுடன் (OIS Support) 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார், 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 64 மெகாபிக்சல் ஓம்னிவிஷன் ஓவி64பி கேமரா (OmniVision OV64B camera) ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை (Triple Rear Camera Unit) பேக் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பக்க கேமராவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider) இடம்பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் (In-display fingerprint scanner) பேக் செய்யலாம்.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 50வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வரும் மட்டுமே வரும் என்றால் கேட்டால்.. நிச்சயம் இல்லை. இது பாஸ்ட் 100வாட் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் (Fast 100W Wired Charging Support) வரும். பேட்டரியை பொறுத்தவரை இது 5400எம்ஏஎச் பேட்டரியை (5400mAh Battery) பேக் செய்யலாம். எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இது ரூ.60,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலையை பொறுத்தவரை, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ரூ.56,999 க்கும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ரூ.61,999 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








