Home
Mobile

பாதி விலைக்கு பிரபல Samsung 5G போன்.. 50% விலை குறைப்பு.. Flipkart-ல் பரபரக்கும் விற்பனை.. என்ன மாடல்?

மெகா தள்ளுபடின்னா அது இப்படித்தான் இருக்கனும் என்பது போல, இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) ஆனது மிகவும் பிரபலமான சாம்சங் கேலக்ஸி எஸ் சீரீஸ் (Samsung Galaxy S Series) ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது முழுதாக 50% தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதென்ன மாடல்? அதன் புதிய விலை என்ன? என்னன்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 5ஜி (Samsung Galaxy S22 Plus 5G) மாடலை பற்றித்தான். பிரமிக்க வைக்கும் வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் 6.6-இன்ச் 120 ஹெர்ட்ஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே, ஸ்மூத் ஆன பெர்பார்மென்ஸை வழங்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் தற்போது பாதி விலைக்கு வாங்க கிடைக்கிறது.

பாதி விலைக்கு பிரபல Samsung போன்.. என்ன மாடல்?

பழைய விலை VS புதிய விலை: சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை (Original Price) ரூ.101999 ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட் வழங்கும் 50% நேரடி தள்ளுபடிக்கு (50% Flat Discount) பின்னர் இது வெறும் ரூ.49999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது நீங்கள் இந்த ஸ்மார்ட்போனின் மீது முழுதாக 50 சதவீத தள்ளுபடியை (50% Offer) பெறுவீர்கள் என்று அர்த்தம்.

50% தள்ளுபடி மட்டுமல்ல சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் மீது எக்ஸ்சேஞ்ச் சலுகை (Exchange Offer) மற்றும் வங்கி சலுகைகளும் (Bank Offers) கூட கிடைக்கிறது. இவ்விரு சலுகைகளையும் பயன்படுத்தும் பட்சத்தில் கேலக்ஸி எஸ்22 பிளஸின் இறுதி விலையை (Final Price) இன்னும் குறைக்க முடியும்.

எக்ஸ்சேன்ஜ் சலுகை: பிளிப்கார்ட் வலைத்தளமானது சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 5ஜி மீது மிகப்பெரிய எக்ஸ்சேஞ்ச் போனஸை (Exchange Bonus) வழங்குகிறது. நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.35600 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும், தள்ளுபடியானது சில நிபந்தனைக்குட்பட்டது மற்றும் நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்யும் போனின் மாடல் (Model) மற்றும் அது வேலை செய்யும் நிலையை பொறுத்து வேறுபடும்.

வங்கி சலுகை: பேங்க் ஆஃபர்களை பொறுத்தவரை, சாம்சங் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு (Samsung Axis bank Credit Card) பரிவர்த்தனைகளில் 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். மேலும் எச்டிஎப்சி பேங்க் கார்டு (HDFC Bank Card) இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.1250 உடனடி தள்ளுபடியும் (Instant Discount) கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 5ஜி போனை இப்போதும் நம்பி வாங்கலாமா? செயல்திறனில் சமரசம் செய்யாத பெரிய டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த மற்றும் அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்களானால், சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 5ஜி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதிலும் குறிப்பாக உங்கள் கவனம் கேமரா மீதுதான் என்றால், இந்த ஸ்மார்ட்போனை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்.

ஏனென்றால் இது ட்ரிபிள் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது, அதில் உயர் தெளிவுத்திறன் கொண்ட மெயின் கேமரா, அல்ட்ரா-வைட் லென்ஸ், டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன, இவைகள் பிரமிக்க வைக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்க உதவவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள குறைகளை (Cons) பொறுத்தவரை, இது சராசரியான பேட்டரி லைஃப்பையே (Normal Battery Life) வழங்குகிறது. இதன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் ஆனது பகல் நேரங்களில் பட்டையை கிளப்பும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வழங்கினாலும் கூட குறைந்த ஒளி நிலைமைகளில் எடுக்கப்படும் லோ-லைட் புகைப்படங்கள் (Low Light Photos) அவ்வளவு சிறப்பாக இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
50 Percentage Flat Offer on This Samsung Phone Flipkart Announced Mega Deal On Galaxy S22 Plus 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X