கம்ப்யூட்டர்/லேப்டப்பில் இருந்து டேட்டாக்களை ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்றுவது எப்படி?

ஒரு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் செய்யும் வேலையை தற்போது ஒரு நல்ல ஆண்ட்ராய்டு போன் மிக எளிதில் செய்துவிடுவதால் வரும் காலத்தில் கையில் ஒரு போன் இருந்தாலே போதும் என்ற நிலைமை ஏற்படும்.

|

ஒரு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் செய்யும் வேலையை தற்போது ஒரு நல்ல ஆண்ட்ராய்டு போன் மிக எளிதில் செய்துவிடுவதால் வரும் காலத்தில் கையில் ஒரு போன் இருந்தாலே போதும் என்ற நிலைமை ஏற்படும். அதே நேரத்தில் ஒரு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் உள்ள டேட்டாக்களை போனுக்கு டிரான்ஸ்பர் செய்ய முடியுமா? என்பது பலருடைய கேள்வியாக உள்ளது. தேவையும் அதிகமாக உள்ளது

ஆம், இது மிக எளிதில் முடியும். இதற்கான சிறந்த வழிமுறைகளை பார்ப்போம். பெரிய ஃபைல்களை கொண்ட டேட்டாவாக இருந்தாலும், பலவிதமான ஃபைல்களாக இருந்தாலும் அவைகளை கம்ப்யூட்டரில் இருந்து போனுக்கு டிரான்ஸ்பர் செய்வது எப்படி என்பதை கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் பார்ப்போம்.

1. யூஎஸ்பி கேபிள்:

1. யூஎஸ்பி கேபிள்:

லேப்டாப் அல்லது கம்யூட்டரில் இருந்து டேட்டாக்களை எளிதில் டிரான்ஸ்பர் செய்ய உதவுவது யூஎஸ்பி ஏ மற்றும் யூஎஸ்பி சி ஆகியவை ஆகும்., இதற்கு பின்வருவனவற்றை பின்பற்றவும்

* உங்கள் போனை கம்ப்யூட்டருடன் இணைக்கவு

* இப்போது உங்கள் போனில் உள்ள நோட்டிபிகேசனை பார்க்கவும்

* அதில் ஃபைல் டிரான்ஸ்பர் என்ற ஆப்சனை கண்டுபிடித்து அதனை கிளிக் செய்யவும். மேக் ஓஎஸ் பயன்படுத்துபவர்களுக்கும் இதே வழிமுறைகள் தான். ஒரே ஒரு அதிகப்படியான வேலை என்னவெனில் அதில் ஆண்ட்ராய்டு ஃபைல் டிரான்ஸ்பர் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும்

2. கிளவுட் அக்கவுண்ட் மூலம் டிரான்ஸ்பர்:

2. கிளவுட் அக்கவுண்ட் மூலம் டிரான்ஸ்பர்:

உங்களுக்கு கூகுள் அக்கவுண்ட் இருந்தால் நீங்கள் 15GB வரை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே கூகுள் டிரைவ் செயலியை உங்கள் லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்யவும். மேலும் நீங்கள் டிராப் பாக்ஸ் அல்லது மைக்ரோசாப்ட்டின் ஒன் டிரைவ்களை கூட பயன்படுத்தலாம். கூகுள் டிரைவ்வில் சைன் இன் செய்த பின்னர் 'பேக்கப் ஆல் த ஃபைல் டைப்ஸ் என்பதை க்ளிக் செய்து அதன்பின்னர் நெக்ஸ்ட் கொடுக்கவும். அதன்பினர் அட்வான்ஸ் செட்டிங்ஸ் என்று தோன்றும். அதில் சிங்க் மை டிரைவ் என்பதை கிளிக் செய்து ஓகே கொடுக்கவும். இதன் மூலம் உங்களுடைய டிரைவ் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் ஒரு ஃபோல்டர் தோன்றும். அதில் உங்கள் டேட்டாக்களை சேமித்து வைத்து கொள்ளலாம். அதன்பின்னர் மீண்டும் அதே கூகுள் கணக்கை போனில் சைன் இன் செய்து டிரைவ் போல்டரை ஓபன் செய்து அந்த டேட்டாக்களை உங்கள் போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

3. இமெயில் மற்றும் மெசேஜிங் செயலி:

3. இமெயில் மற்றும் மெசேஜிங் செயலி:

ஜிமெயில் உங்களுக்கு 25 ஜிபி வரை ஃபைல்களை இணைத்து அனுப்ப அனுமதிக்கின்றது. 2ஜிபி வரை ரிஜிஸ்ட்ரேஷன் செய்யாமலேயே இலவசமாக அனுப்பி கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது wetransfer.com என்ற இணையதளம் சென்று உங்களுடைய இமெயில் முகவரியை பதிவு செய்து உங்கள் டேட்டாக்களை அதில் இணைத்து அனுப்பி கொள்ளலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு அனுப்பப்படும் ஃபைல்கள் ஏழு நாட்களுக்கு பின் டெலிட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

4. புளூடுத்:

4. புளூடுத்:

ஃபைல்களை டிரான்ஸ்வர் செய்வதற்கு புளூடூத் ஒரு சிறந்த வழியாகும். விண்டோஸ் 10 லேப்டாப்பில் இருந்து உங்கள் மொபைலுக்கு புளூடூத் மூலம் வெகு எளிதாக ஃபைல்களை டிரான்ஸ்பர் செய்ய முடியும். இதற்கு நீங்கள் செட்டிங்ஸ் சென்று அதில் உள்ள டிவைசஸ் ஆப்சனை தேர்வு செய்து புளூடூத்தை டர்ன் ஆன் செய்யவும். அதேபோல் உங்கள் மொபைலிலும் புளூடூத்தை ஆன் செய்து கொள்ளவும். அதன் பின்னர் புளுடூத் உங்கள் போனை கண்டுபிடிக்கும். அதன் பின்னர் கனெக்ட் என்பதை கொடுத்து போனையும், கம்ப்யூட்டரையும் இணைக்கவும். அதன்பின்னர் ஃபைல்களை டிரான்ஸ்பர் செய்ய செட்டிங், டிவைசஸ் சென்று அதில் உள்ள புளூடூத் வழியாக செண்ட் ஃபைல்ஸ் என்ற ஆப்சனை கிளிக் செய்து தேவையான ஃபைல்களை டிரான்ஸ்பர் செய்து கொள்ளவும்

5. ஃவைபை:

5. ஃவைபை:

பெரிய ஃபைல்களை வேகமாக அனுப்ப ஒரு சிறந்த் வழிமுறை தான் ஃவைபை. இதற்காக நீங்கள் உங்கள் மொபைலில் போர்ட்டல் வழங்கும் புஷ்பெல்ட் என்ற செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதன்பின்னர் உங்கள் கம்ப்யூட்டரில் பிரெளசரை ஓப்பன் செய்து அதில் போர்ட்டல் புஷ்பெல்ட் இணையதளம் செல்லுங்கள். அதில் ஒரு க்யூ ஆர் கோட் தெரியும். உங்கள் போனில் போர்ட்டலை ஓப்பன் செய்து அந்த க்யூ ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யவும். இதன்மூலம் உங்கள் போனும் கம்ப்யூட்டரும் இணைக்கப்பட்டுவிடும். அதன்பின்னர் உங்கள் ஃபைல்களை நீங்கள் எளிதாக டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். இதேபோல் ஏர்டிராய்டு மற்றும் ஃபீம் போன்ற செயலிகளும் இதற்கு உதவும்

Best Mobiles in India

English summary
5 ways to transfer data from laptop/PC to Android phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X