மொபைல் பில்லை கட்டுப்படுத்த சில வழிகள்!

இப்படி எகிடுதகிடாக எகிறி வரும் மொபைல் கட்டணங்களை அக்கறை எடுத்து கொண்டால் கொஞ்சம் குறைக்கலாம். இதற்கு சில டிப்ஸ் இங்கே.
எந்த நேரத்தில் மொபைலில் அதிகம் பேசுகிறோம் என்று பாருங்கள். உதாரணத்திற்கு பகல் பொழுதிலா? இரவு நேரத்திலா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக இரவு நேரங்களில் குறைந்த கட்டணத்தில் அதிக நேரம் பேசுவது போன்ற சலுகைகளை நிறைய நிறுவனங்கள் வழங்குகிறது. அந்த சலுகைகளை பயன்படுத்துவதும் நல்லது.
சிம் கார்டை வாங்கும்போதே அதிக சலுகைகளை வழங்கும் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். டோல் ஃப்ரீ என்று கூறப்படும் இலவச அழைப்பு சேவைகள் கொண்ட தொலைபேசி எண்களுக்கு மொபைல்போனிலிருந்து பேசுவதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் இந்த டோல் ஃப்ரீ அழைப்புகள் லேண்ட் லைன் போனிலிருந்து மட்டும் தான் இலவசமாக அழைப்பு செய்ய முடியும். மொபைல்களில் இருந்து செய்யப்பட்டால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆகையினால் இந்த டோல் ஃப்ரீ கால்களை தவிர்ப்பது நல்லது.
ஃப்ரென்ட்ஸ் மற்றும் ஃபேமிலி பேக் போன்ற சிறப்பு திட்டத்தினை தேர்வு செய்து கொண்டால் அதிக சலுகைகளை பெற முடியும். மொபைல்போன் பில் எகிறுவதையும் வெகுவாக கட்டுப்படுத்தலாம். இது போன்ற திட்டத்திலும் குறைந்த கட்டணத்தில் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பயன்பாட்டிற்கு தகுந்த வகையில் அளவில்லா கட்டண சலுகை (அன்லிமிடேடு) வசதிகளை பயன்படுத்துவது இன்னும் சிறந்தது. இதன் மூலமலாகவும் மொபைல் கட்டணங்களை குறைக்கலாம்.
மொபைல் கட்டணங்கள் அதிகரித்து வரும் இந்த சமயங்களில், இந்த வழிகள் மொபைல் பில் எகிறுவதை குறைக்கும்.


Click it and Unblock the Notifications