மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது - சில யோசனைகள்

By Karthikeyan
|
மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது - சில யோசனைகள்

இந்த நவீன யுகத்தில் மொபைல் போன்கள் 24 மணி நேர தேவையாகிவிட்டது. குறிப்பாக அழைப்புகள், குறுஞ்செய்திகள், சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், இசை, ரேடியோ மற்றும் டிவி நிகழ்ச்சிள் ஆகிய எல்லாவற்றையும் தற்போது இந்த மொபைல் போன்கள் வழங்கி வருகின்றன. ஆகவே இந்த மொபைல் போன்கள் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டன.

ஆனால் இந்த மொபைல் போன்களில் சார்ஜ் இல்லை என்றால் அந்த போன்களால் எந்தவித பயனும் இல்லை. மேலும் மின்சாரம் இல்லாத போது இந்த போன்களில் சார்ஜ் இல்லையென்றால் இந்த போன்களுக்கு சார்ஜ் ஏற்றவும் முடியாது. அதனால் இந்த மொபைல் போன்களுக்கு வேலையும் இருக்காது.

ஆகவே 24 மணி நேரமும் மொபைல் போன்களில் சார்ஜ் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மின்சாரம் இல்லாத நேரங்களிலும் மொபைல் போன்களில் மொபைல் போன்களை எவ்வாறு சார்ஜ் தீராமல் பார்த்துக் கொள்வது என்பதைக் கீழே பார்க்கலாம்.

குறிப்பாக மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் உள்ள பேட்டரிகளுக்கு மாற்றாக எப்போதுமே ஒரு பேக்கப் சார்ஜர் இருக்க வேண்டும். இந்த பேக்கப் சார்ஜர்கள் 100 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக விற்கப்படுகின்றன. குறிப்பாக சாக் ஸ்பார்க் போன்ற பேக்கப் சார்ஜர்கள் மின்சாரம் இல்லாத போது நமது மொபைல் போனில் சார்ஜ் தீராமல் பார்த்துக் கொள்கிறது.

அதுபோல் சோலார் பவரில் வரும் சார்ஜர்களையும் பயன்படுத்தலாம். அதோடு கார் சார்ஜரையும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் மொபைல் போன்களில் சார்ஜ் ஏற்ற முடியும்.

மேலும் பவர் இன்வெர்ட்டரை வாங்கிக் கொள்ளலாம். இந்த பவர் இன்வெர்ட்டர்கள் மின்சாரம் இல்லாத போது மொபைல் போன்களுக்குத் தேவையான சார்ஜை வழங்கும்.

அடுத்ததாக லேப்டாப்புகள் ஒரு பேக் அப் ஜெனராட்டர்களாக இருக்கின்றன. ஆகவே லேப்டாப்புகள் முழுமையாக சார்ஜ் பெற்றிருந்தால் மின்சாரம் இல்லாத போது லேப்டாப்புகளில் மொபைல் போன்களை யுஎஸ்பி மூலம் இணைத்து சார்ஜ் போடலாம்.

மேலும் மின்சாரம் இல்லாத போது மொபைல் போன்களில் உள்ள போன் செட்டிங்கை பரிசோதித்து, அதில் இயங்கும் அப்ளிகேசன்களை நிறுத்த வேண்டும். குறிப்பாக வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற அப்ளிகேசன்களை உடனே நிறுத்த வேண்டும். இதன் மூலம் மொபைல் போனின் சார்ஜை சேமிக்க முடியும்.

ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களின் பேட்டரியின் நீடித்த உழைப்பிற்கு ஏராளமான இலவச அப்ளிகேசன்கள் உள்ளன. குறிப்பாக காரட் போன்ற இலவச அப்ளிகேசன்களைப் பயன்படுத்தினால் மொபைல் போன்களின் பேட்டரியும் நீடித்து உழைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X