உலகின் மிகச்சிறிய டச் ஸ்க்ரீன் போன் Vபோன் S8-ன் குறித்து தெரிந்து கொள்வோமா?

By Siva
|

இன்றைய ஸ்மார்ட்போன் டெக்னாலஜி உலகில் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு பெரிய ஸ்க்ரீன் கொண்ட டச் போன் மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் நிலையில் எதிர்ப்பதமாக உலகின் மிகச்சிறிய டச் போனை Vபோன் S8- போன் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகச்சிறிய டச் ஸ்க்ரீன் போன் Vபோன் S8ன் குறித்து தெரிந்து கொள்

ஸ்மார்ட் வாட்சை போலவே மிகச்சிறியதாக இருக்கும் இந்த Vபோன் S8-டச் ஓன் இந்தியர்களுக்குத்தான் புதியது என்றாலும் சீனாவில் இது கடந்த 2010ஆம் ஆண்டே வெளிவந்துவிட்டது.

இந்த தீபாவளிக்கு ரூ.5,000/-க்குள் வாங்க முடியும் டாப் கேஜெட்ஸ்.!

மிகச்சிறியதாக இருந்தாலும் ஒரு நார்மல் சைஸ் செல்போனுக்குரிய சிம்கார்டு உள்பட அனைத்து அம்சங்கள் இதிலும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் வாட்சை போல மிகச் சிறியது:

ஸ்மார்ட் வாட்சை போல மிகச் சிறியது:

Vபோன் S8 போன் வார் இல்லாத கைக்கடிகாரம் போலவே மிகச்சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 46.7 mm x 37.3 mm x 9.9 mm அளவில் வெறும் 30 கிராம் மட்டுமே எடையை கொண்ட இந்த கைக்கு அடக்கமான போன் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் போலவே தோற்றம் கொண்டது. டிஸ்ப்ளேவுக்கு கீழே மூன்று பட்டன்களை கொண்ட இந்த Vபோன் S8 போன் அலுமினியம், மெக்னீசியம் ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்டது.

1.54 இன்ச் மட்டுமே ஸ்க்ரீனின் அளவு:

1.54 இன்ச் மட்டுமே ஸ்க்ரீனின் அளவு:

ஸ்மார்ட்போன்கள் 8 இன்ச் டிஸ்ப்ளே வரை சர்வ சாதாரணமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த போன் வெறும் 1.54 இன்ச் டிஸ்ப்ளே மட்டுமே கொண்டது. 2.5D வளைந்த கண்ணாடி ஸ்க்ரீனை கொண்டது. இந்த சிறிய டிஸ்ப்ளேவில் நேரம், இன்கமிங் கால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் ஆகியவைகளை தெரிவிக்கும் தன்மை உடையது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பொருந்தும்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பொருந்தும்

இந்த Vபோன் S8 போன் ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஐஓஎஸ் போனாகவும் செயல்பட்டு வருவது ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் புளூடூத், கால்கள் பெற மற்றும் அழைக்க, எஸ்.எம்.எஸ் அனுப்ப மற்றும் பெற்றுக்கொள்ள மற்றும் சமூக வலைத்தளங்களின் அப்ளிகேசனை உபயோகிக்க தகுந்தது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

ஹார்ட்வேர் எப்படி இருக்கும்?

ஹார்ட்வேர் எப்படி இருக்கும்?

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற வகையில் சிறிய வகை போனாக இருந்தாலும் ஹார்ட்வேர் அம்சங்களில் குறைவு இல்லை. பிரைமரி டிவைஸ்களில் இருப்பது போல் 128MB ரோம் மற்றும் 64MB ரேம் கொண்ட இந்த போனில் 8GB இன்னர் மெமரியை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த போனில் MT2502 பிராஸசர் உள்ளது.

வேறு என்னென்ன அம்சங்கள் உள்ளது?

வேறு என்னென்ன அம்சங்கள் உள்ளது?

மினியாக இருந்தாலும் இனிமையாக உள்ள இந்த Vபோன் S8 போனில் புளூடூத் v4.0, 5 PIN USB, USB 2.0 மற்றும் எப்.எம் வானொலி, லைட் சென்சார், ஹார்ட் ரேட் மானிட்டர், மற்றும் மோஷன் சிப் ஆகியவை உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Here's everything you want to know about World's smallest touch screen smartphone- the Vphone S8.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X