Home
Mobile

அசத்தும் அம்சங்களுடன் ஆல் நியூ நோக்கியா 3310, என்ன விலை.?

இதோ நோக்கியா 3310 கருவியின் அதிகாரப் பூர்வ அம்சங்கள், விலை மற்றும் அப்டேட்ஸ் சார்ந்த தகவல்கள்.!

By Muthuraj

நோக்கியா 3310 கருவி சார்ந்து கிட்டத்தட்ட நாம் பெற்ற அனைத்து வதந்திகளும் நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் உண்மையாகிவிட்டது. கடந்த பொற்காலத்தில் நமது கைகளில் தவழ்ந்த கிளாஸிக் கருவியான நோக்கியா 3310 மீண்டும் நமது கைகளில் தவழும் வரத்தை நோக்கியா நிறுவனம் நோக்கியா பக்தர்களுக்கு வழங்கியுள்ளது.!

அசத்தும் அம்சங்களுடன் ஆல் நியூ நோக்கியா 3310, என்ன விலை.?

ஆம். எளிமையான வடிவமைப்பு கொண்ட அதே சமயம் அழிக்கமுடியாத ஷெல் கொண்ட நோக்கியா 3310 கருவியானது (நேற்று) அறிமுகமானது. கடந்த பல நாட்களாக சரியான தகவல்கள் இன்றி லீக்ஸ் தகவல்களின் குறிப்புகளில் சிக்கி தவித்த நோக்கியா பிரியர்களே இதோ நோக்கியா 3310 கருவியின் அதிகாரப் பூர்வ அம்சங்கள், விலை மற்றும் அப்டேட்ஸ் சார்ந்த தகவல்கள்.!

வண்ண திரை

வண்ண திரை

டிஸ்ப்ளே தொழில்நுட்பம் என்று வரும்போது புதிய நோக்கியா 3310 ஆனது கிளாசிக் 3310 கருவியை விட பல மெயில் தூரம் அதிக பாய்ச்சலை வழங்குகிறது. அதாவது வண்ணத்திரை கொண்டுள்ளது. வழக்கற்றுபோன ஒற்றை நிற காட்சிகள் காலம் மாறி வண்ண திரை கொண்டு நோக்கியா 3310 வெளியாகும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

120 பிபிஐ பிக்சல் அடர்த்தி

120 பிபிஐ பிக்சல் அடர்த்தி

இந்த புதிய நோக்கியா 3310 ஆனது 120 பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஒரு 2.4 அங்குல டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இதன் மூலம் 3310 டிஸ்ப்ளே ஆனது பெரிய புரட்சி என்றில்லாமல் ஒரு போதுமான அளவு கொண்ட டிஸ்ப்ளேவாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

கர்வுடு ஸ்க்ரீன் விண்டோ

கர்வுடு ஸ்க்ரீன் விண்டோ

அதுமட்டுமின்றி நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமைகளை பெற்றுள்ள எச்எம்டி நிறுவனம், புதிய நோக்கியா 3310 கருவியின் துருவமுனைப்பட்ட (போலரைஸ்டு) மற்றும் கர்வுடு ஸ்க்ரீன் விண்டோ, சூரிய ஒளியில் நல்ல வாசிப்பு திறனை வழங்கும் என்றும் கூறியுள்ளது.

கேமரா

கேமரா

இந்த புதிய நோக்கியா 3310 கருவி அதன் முன்னோடி போலல்லாமல் ஒரு எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 2 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது, செல்பீ கேமரா கிடையாது.!

வெளிப்படை

வெளிப்படை

இந்த கேமரா எளிய புகைப்படங்களை பதிவு செய்ய உதவும். எனவே உயர் தீர்மான புகைப்படங்களை இந்த கருவியின் மூலம் எதிர்பார்க்க வேண்டாம் என்று வெளிப்படையாக கூறிவிட்டது எச்எம்டி நிறுவனம். சமூக ஊடக ஆர்வலர்கள் சேர்த்து நமக்கும் இந்த புதிய போனில் செல்ஃபிகளுக்கான முன் கேமரா இல்லை என்பதில் பெரிய வருத்தம் மற்றும் ஏமாற்றம் தான்.!

ஸ்னேக் கேம்

ஸ்னேக் கேம்

ஸ்னேக் கேம் - ஞாபகம் இருக்கிறதா.??? - அந்தக்காலத்து போதையான வீடியோ கேம் ஆன நோக்கியா 3310 பிரபல ஸ்னேக் கேம் ஆனது அப்டேட் செய்யப்பட்டு இந்த புதிய நோக்கியா 3310 கருவியிலும் இடம் பெற்று நம்மை மீண்டும் அடிமைபப்டுத்த வருகிறது.

மல்டிகலர்டு

மல்டிகலர்டு

அதே எளிய நான்கு பொத்தான் கேம் ஆன ஸ்னேக் இந்த புதிய பதிப்பில் அதற்கே உரிய எளிய 2டி கேம் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே மாற்றம் என்னவென்றால் பழைய ஒரு ஒரே வண்ணமுடைய தோற்றத்திற்கு பதிலாக ஒரு மல்டிகலர்டு கலை பாணியில் வெளியாகியுள்ளது.

கொடூரமான பேட்டரி லைஃப்

கொடூரமான பேட்டரி லைஃப்

எல்லாவற்றிக்கும் மேலாக நவீன கால ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும் வண்ணம் புதிய நோக்கியா 3310 ஒரு "கொடூரமான பேட்டரி லைஃப்" கொண்டுள்ளது.

ஒரு மாத காலம் காத்திருப்பு நேரம்

ஒரு மாத காலம் காத்திருப்பு நேரம்

பழைய கருவியை விட 10 மடங்கு அதிகமான பேட்டரி திறன் கொண்டு இக்கருவி வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தளத்தில் இக்கருவி ஒரு மாத காலம் காத்திருப்பு நேரம் மற்றும் 22 மணி நேர பேச்சு நேரம் வழங்குமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.!

விலை

விலை

இந்த புத்தம்புதிய நோக்கியா 3310 கருவியானது அதன் அசலை போன்றே ஒரு மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய தொலைபேசியானது 49 யூரோக்கள் என்ற விலை ஐரோப்பாவில் கிடைக்கும் அதாவது இந்தியாவில் ரூ. 3450/- என்ற விலை நிர்ணயம் பெறும்.

அடைப்புக்குறிக்குள்

அடைப்புக்குறிக்குள்

இந்தியா உட்பட பிற பகுதிகளில் புதிய நோக்கியா 3310 கருவி சார்ந்த விலைகள் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் ரூ.3450./- என்ற ஒரு அடைப்புக்குறிக்குள் தான் விலை நிர்ணயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அறிமுகம் : நோக்கியா 3, நோக்கியா 5 (விலை, அம்சங்கள், இந்திய வெளியீடு).!

Best Mobiles in India

English summary
5 things you need to know about the new Nokia 3310. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X