ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்க 5காரணங்கள்.!

மென்பொருள் மற்றும் வன்பொருள் சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

|

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தரமான ஸ்மார்ட்போன் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது, அந்த வகையில் வரும் அக்டோபர் 30-ம் தேதி அன்று மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்,

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை அமேசான் வலைதளம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என்று,தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மிக அதிமாக விற்பனை
செய்யப்படும் என ஒன்பிளஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்க 5காரணங்கள்.!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் முன்பதிவு சில நாட்களுக்க முன்பு துவங்கப்பட்டது, அதில் மிக அதிகமான மக்கள் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்துள்ளனர். பின்பு இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் கூட இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் அமேசான் வலைதளத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த விற்பனையில் கூட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிக விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுளளது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொதுவாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வாங்க அருமையான 5 காரணங்களை பார்ப்போம்.

இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார்:

இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார்:

விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்று ஒன்பிளஸ் நிறுவனத்தின் நிறுவனர் Pete Lau என்பவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதற்குமுன்பு விவோ வி9, விவோ வி11,விவோ 11ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களில் இந்த இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க முடியும்.

பின்பு மென்பொருள் மற்றும் வன்பொருள் சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதன்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் அம்சம் இந்த ஸமார்ட்போனில் இடம்பெற்றுள்ள மிகச்சிறப்பாக அம்சமாக இருக்கும்.

விரைவான டாஷ் சார்ஜிங் :

விரைவான டாஷ் சார்ஜிங் :

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொதுவாக மேம்பட்ட டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் வேகமான சார்ஜ் வழங்கும் என்பதால் அனைத்து இடங்களிலும் எளிமையாக பயன்படுத்த முடியும். பின்பு சிறந்த டாஷ் சார்ஜ் இணைந்து நீண்ட காரணமாக மொபைல் பேட்டரி பிரச்சினைகள் தீர்க்க போகிறது என்று தான் கூறவேண்டும். வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 3 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

இயங்குதளம்:

இயங்குதளம்:

இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை OxygenOS 9.0 இயங்குதளம் இடம்பெறும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
பின்பு இந்த இயங்குதளம் கூகுள் டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே பல்வேறு ஆப் பயன்பாடு மற்றும் பேட்டரி சார்ந்த தகவலை அறிய மிக எளிமையாக உதவும் ஆண்ட்ராய்டு பை OxygenOS 9.0 இயங்குதளம்.

சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே:

சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே:

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே 5.99-இன்ச் டிஸ்பிளே வரை இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. பின்பு பெசல்-லெஸ் வசதி கூட இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் டூயல் செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது என ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர்போன்:

ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர்போன்:

விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் உடன் ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர்போன வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீடித்து உழைக்கும் பயன்பாட்டுடன் இந்த சாதனம் வெளிவரும், பின்பு அரமிட் பைபர்கள் மூலம் உருவாக்கப்பட்ட உட்கம்பிகளை கொண்டதால் இந்த இயர்போன் இழுக்கப்படும்பொழுது எளிதாகச் சேதம் அடையாது என ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது. சிரஸ் லாஜிகுடன் கூடிய டிஎசி கொண்டு கூடுதல் டைனமிக் ரேன்ஜ் மற்றும் அதிக சிக்னல் - நாய்ஸ் விகிதத்துடன் கூடிய சிறந்த ஆடியோ அனுபவத்தை இந்த புல்லட் இயர்போன் நமக்கு வழங்குகிறது.

புதிதாக அறிமுகமாக இருக்கும் ஒன் பிளஸ் 6T இல் திரையிலேயே இன்பில்ட் கைரேகை சென்சார் இருக்கும் என்று ஏற்கெனவே நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், இப்போது இந்த இயர்போனும் அத்துடன் வெளியிட இருப்பதால் ஒன் பிளஸ் 6T இல் 3.5mm ஹெட்போன் ஜாக்-கும் நிச்சயம் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயர்போனை ஒன் பிளஸ் 6வு மட்டுமின்றி இதே அளவு டைப்-சி போர்ட் உடைய அணைத்து மொபைல் போன்களிலும் பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
5 things we are absolutely excited to see on the OnePlus 6T: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X