2018ல் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்க வேண்டிய 5 ஸ்மார்ட்போன்கள்.!

கிஸ்பாட்-ஐ பொறுத்தவரை புதிய ஐபோன்கள் வருகிறது என்றால், அதை உடனே வாங்கவேண்டிய அவசியமில்லை.

|

2018ம் ஆண்டு முடிவடையும் தருவாயில் உள்ளதால், சில முக்கியமான செயல்திறன் காரணிகளில் இன்னும் சிறப்பாக செய்யதிருக்கலாம் என நம்பும் சில ஸ்மார்ட்போன்களை இங்கு நினைவுகூரலாம். பின்வரும் பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு தோல்வியடைந்தவையாக கருதவேண்டியதில்லை. உண்மையில் சிறப்பான போன்களான அவை, சில உயர்தர அம்சங்களை வழங்கியும், ஒட்டுமொத்த செயல்திறன் மூலமும் நம்மை கவர்ந்துள்ளன.

இந்த போன்களை பரிசோதிக்கையில், இவற்றில் உள்ள சில குறிப்பிட்ட அம்சங்கள் சிறப்பாக செயல்பட்டதாக உணர்ந்தோம். அந்த சிறப்பம்சங்களின் பட்டியல் இதோ.

  ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ்/எக்ஸ்எஸ் மேக்ஸ் / எக்ஸ் ஆர்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ்/எக்ஸ்எஸ் மேக்ஸ் / எக்ஸ் ஆர்

ஆப்பிள் நிறுவனம் தனது நன்மதிப்பை முழுவதுமாக இழந்து தற்போது தனது வியாபாரத்தை லாபகரமானதாக நிலைக்க செய்யும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய ஐபோன்களை வெளியிட்டு, ஒவ்வொரு பயனரிடமும் எவ்வளவு பணத்தை கறக்க முடியுமோ அவ்வளவுவையும் செய்கிறது. கடைசியில் பயனருக்கு மிஞ்சுவது என்னவோ, பளபளப்பான மெடல் க்ளாஸ் போனும், சில மேம்படுத்தப்பட்ட அம்சங்களும் மட்டுமே. சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன்களை அதன் தோல்வியடைந்த புதுமை முயற்சிகளுக்கு சிறந்த உதாரணமாக கூறலாம். ஸ்மார்ட்போன்கள் சிறந்த வன்பொருள், பெரிய திரைகள், சிறிது மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் சிறந்த பேட்டரி லைப் வழங்கினாலும், புதுமை என்ற பெயரில் சிறிதளவே வழங்குகின்றன. அதீத விலையில் மட்டுமே ஐபோன்கள் சிறப்பாக உள்ளன. அதற்கு நேர்மாறாக, ஆண்ராய்டு போன்கள் குறைந்த விலையில் இதை விட சிறந்த கேமரா, திரை, அனுபவத்தை தருகின்றன. சாம்சங் கேலக்ஸி நோட்9, கூகுள் பிக்சல் 3எக்ஸ்.எல், ஹவாய் மேட் 20 ப்ரோ போன்றவற்றை எடுத்துக்காட்டாக கூறலாம்.

புதிய ஐபோன்கள் வருகிறது என்றால், அதை உடனே வாங்கவேண்டிய அவசியமில்லை. அவை புதியவை என்பதாலேயே அதற்கான விலைக்கு தகுதியானலை அல்ல. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் உங்களிடம் இருந்தால், அதை புதிய ஐபோனுடன் மாற்ற வேண்டியதில்லை. முதல்முறை ஐபோன் வாங்குபவராக இருந்தால், உங்கள் அதிர்ஷ்டத்தை ஐபோனில் செலவளிக்கும் முன், சந்தையில் உள்ள சிறந்த ஆண்ராய்டு போன்களை ஒரு முறை பாருங்கள்.

சாம்சங் கேலக்ஸி ஏ9

சாம்சங் கேலக்ஸி ஏ9

உலகின் முதல் க்வாட் லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன் என பெயர் பெற்ற இது, புதிய பயனர்களுக்கு சில அம்சங்களை வழங்கினாலும், கேமராவை மையப்படுத்திய இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செயல்திறன் சற்று ஏமாற்றம் அளிக்கக்கூடியதாகவே இருந்தது. என்னதான் உயர்தரமான வன்பொருள் கொண்ட கேமராவாக இருந்தாலும், அதன் செயல்திறன் சராசரியாகவே இருந்தது. புதுமை என்ற பெயரில் விலையை பார்த்து சமாதானம் அடைந்தாலும், கேமராவின் அவுட்புட் நமக்கு ஏமாற்றமளிக்கக்கூடியதே.

ஒன்ப்ளஸ் 6

ஒன்ப்ளஸ் 6

உலகம் முழுவதும் பரவலாக பிரபலமாக இருக்கும் ஒன்ப்ளஸ், அது வெளியான போது விலைக்கு ஏற்ற சரியான போனாக இருந்தது. மல்டி டாஸ்கிங், காம்ப்யூட்டிங், கேமிங், சார்ஜிங் ஸ்பீட் போன்றவற்றில் சிறப்பான செயல்பாடுகளை வழங்குகிறது. ஆனால் இதன் விலையுடுன் ஒப்பிடும் போது, அதற்கேற்ற கேமரா செயல்திறனை தர தவறிவிட்டது.மேலும் தண்ணீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கும் ஐபி ரேட்டிங்கும் இல்லை. ஒன்ப்ளஸ் 6Tம் அந்த ரேட்டிச் பெறாத நிலையில், ஒன்ப்ளஸ் 7 க்காக அதன் பேன்ஸ் காத்திருக்க வேண்டியதுதான்.

நோக்கியா 7 ப்ளஸ்

நோக்கியா 7 ப்ளஸ்

பழம்பெரும் ப்ராண்டிலிருந்து வந்திருக்கும் இது, 18:9 திரை, சிறந்து பேட்டரி லைப், பிழையில்லா மென்பொருள் செயல்பாடு மற்றும் ஸ்னாப்டிராகன் 660 சிபியூ என பல அம்சங்களை கொண்டுள்ளது. எனினும் லோ லைட் போட்டோகிராபி செயல்திறனை மேம்படுத்தும் வகையில் சிறந்த கேமராவை பயன்படுத்தியிருக்கலாம். ரூ25,999 என்ற ஆடம்பர விலையில், சிறப்பான கேமரா இல்லாததால் அன்றாட வாழ்வில் நம்மை ஈர்க்க தவறிவிட்டது.

ஓப்போ ஃபைன்ட் எக்ஸ்

ஓப்போ ஃபைன்ட் எக்ஸ்

இன்றைய ஸ்மார்ட்போன்களில், எதிர்காலத்திற்கான மற்றும் சிறப்பான தோற்றம் கொண்ட போன் தான் என்பதில் சந்தேகமே இல்லை. பார்பதற்கு அழகானது மற்றும் புதுமையான வடிவமைப்பு என்பதை தவிர்த்து, இது அரைவேக்காடானது. கலர்ஓஎஸ் போனின் வடிவமைப்பு மற்றும் வன்பொருளுக்கு பொறுத்தமானதாக இல்லை மற்றும் கேமராவின் செயல்திறனும் தர அளவுகளை பூர்த்திசெய்யவில்லை. உங்களுக்கு வெளிப்புற வடிவமைப்பு தான் முதன்மையான எனில்,வேறு எதையும் யோசிக்காமல் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்-ஐ ஆர்டர் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
5 Smartphone we think could have been better in the year 2018: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X