Home
Mobile

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவில் உள்ள 5 பாதுகாப்பு அம்சங்கள்

By Jijo Gilbert

ஆண்ட்ராய்டின் அடுத்த நிலையை, சுவையான சிற்றுண்டியான ஓரியோவின் பெயரில் கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேம்பட்ட செயல்பாட்டிற்கு வழிவகுக்கும் வேகம் மற்றும் செயல்திறனை மையமாக கொண்ட பல்வேறு அம்சங்களோடு இந்த புதுப்பிப்பு காணப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவில் உள்ள 5 பாதுகாப்பு அம்சங்கள்

மேலும், உங்கள் ஃபோன் பேட்டரி மற்றும் டேட்டா திட்டத்தை வேகமாக கரைய செய்யும் திரைக்கு பின்னால் நடைபெறும் செயல்பாடுகளை, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சிறப்பான முறையில் எதிர்கொள்கிறது. சில சிறப்பான அம்சங்களைத் தவிர, மற்ற அம்சங்களுக்கு நிகரான முக்கியத்துவத்தை பெறும் சில அறியப்பட்ட பாதுகாப்பு தொடர்பான மேம்பாடுகளும் ஆண்ட்ராய்டு ஓரியோவில் காணப்படுகிறது. எனவே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான காரியங்களை, இந்தக் கட்டுரையில் ஒரு பட்டியலாகத் தொகுத்துள்ளோம்.

ஒன்றின் மேல் ஒன்றாக வருவதை நிராகரிக்கும் அமைப்பு

ஒன்றின் மேல் ஒன்றாக வருவதை நிராகரிக்கும் அமைப்பு

பொதுவாக ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனின் மீது பாப்அப்களை உருவாக்க மற்றொரு அப்ளிகேஷனுக்கு ஆண்ட்ராய்டு அனுமதி அளிக்கிறது. இது பிச்சர்-இன்-பிச்சர் (PIP) என்று அழைக்கப்படும் சில அம்சங்களின் மூலம் உருவாக்கப்படுகிறது.

ஆனால் இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் சில ஹேக்கர்கள், பெருந்தொகையை வசூல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆண்ட்ராய்டில் நிகழும் இந்த மடக்கு செயலைத் தடுக்க, ஒன்றின் மேல் ஒன்று எப்போது வந்தாலும் உடனே அதை குறித்த தொடர் அறிவிப்பை அளிக்கப்படுகிறது.

சைடுலோடிங் ஆப்கள் பாதுகாப்பானது

சைடுலோடிங் ஆப்கள் பாதுகாப்பானது

முன்பு சைடுலோடிங் அப்ளிகேஷன்களுக்கு எந்தொரு சரிபார்ப்பும் இல்லாமல் செயல்பட்டது, ஆபத்தான ஒன்றாக இருந்தது. ஆனால் ஆண்ட்ராய்டு ஓரியோவில், ஒவ்வொரு அப்ளிகேஷனாக அமைப்புகளை மாற்றியமைக்குமாறு உங்களைக் கேட்கும்.

எடுத்துக்காட்டாக, க்ரோமில் இருந்து பெறப்பட்ட ஏபிகே-க்களை நேரடியாக உங்களால் நிறுவ முடியும். ஆனால் மற்ற ஆதாரங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஏபிகே-க்களை நிறுவுவது தடை செய்யப்படும்.

ஆண்ட்ராய்டு மூலம் சரிபார்க்கப்பட்ட பூட் 2.0

ஆண்ட்ராய்டு மூலம் சரிபார்க்கப்பட்ட பூட் 2.0

பொதுவாக, ஆண்ட்ராய்டு மூலம் சரிபார்க்கப்பட்ட பூட் என்று அழைப்பது, 4.4 கிட்காட் முதலே ஆண்ட்ராய்டில் கட்டமைக்கப்பட்டதாக வருகிறது. பாதுகாப்பு அப்ளிகேஷன்களின் பிடியில் சிக்காமல் மறைக்கும் வகையில், அடிப்படை அனுமதிகளைப் பெற்ற இது, ஒரு புத்திசாலித்தனமான ஆண்ட்ராய்டு மால்வேர் ஆகும்.

இது சாதனம் பூட் ஆவதை தடுக்கிறது. இதை தவிர்க்கும் வகையில், ஆண்ட்ராய்டு சரிபார்ப்பு கொண்ட பூட் 2.0 உடன் முழுமையான பாதுகாப்பு கொண்டதாக ஆண்ட்ராய்டு ஓரியோ வருகிறது.

தரம் தாழ்ந்ததாக அல்லது மிகவும் பாதிக்கப்படக்கூடிய பதிப்பாக இருந்தால் மட்டுமே, சாதனம் பூட் ஆவதை இந்த அம்சம் தடுக்கும். ஆப்ரேட்டிங் சிஸ்டம் பதிப்பை ஒரு சிறப்பான ஹார்டுவேரில் சேமிப்பதன் மூலம் இதை செய்ய முடியும்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
பொது வைஃபையில் இருந்து பாதுகாப்பு

பொது வைஃபையில் இருந்து பாதுகாப்பு

பாதுகாப்பு பிரச்சனைகளைக் கொண்டதாக இருக்க வாய்ப்புள்ள ஒரு பொது வைஃபையில் இணைப்பது எப்போதும் அபாயகரமானது ஆகும். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கும் முயற்சியாக, ஆண்ட்ராய்டு ஓரியோவில் வைஃபை அசிஸ்டெண்ட் அம்சம் காணப்படுகிறது. இதன்மூலம் ஒரு உயர்தர வைஃபை இணைப்பை பயனர்கள் பெற உதவுவதோடு, கூகுள் நிறுவனத்திற்கு விபிஎன்-னை அனுப்பி பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. இந்த அம்சமானது, பிராஜெக்ட் எப்ஐ மற்றும் நெக்சஸ்/ பிக்ஸல் சாதனங்களில் மட்டுமே வேலைச் செய்கிறது. இந்த புதுப்பிப்பை, மற்ற ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சாதனங்களுக்கும் கூகுள் நிறுவனம் விரைவில் அளிக்கும் என்று நம்புவோம்.

உடல்சார் பாதுகாப்பு சாவிகள்

உடல்சார் பாதுகாப்பு சாவிகள்

பாதுகாப்பு காரணங்களுக்காக, கடந்த சில மாதங்களுக்கு முன் இரட்டை காரணி அங்கீகாரத்தை கூகுள் அறிமுகம் செய்தது. இதில் இரண்டாவது முறை அங்கீகாரத்திற்கு தனித்துவ குறியீடுகளை உள்ளிட வேண்டும் என்பதால், இது சில நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துவதாக அமைகிறது.

எனவே இதற்கு மாற்றாக, உடல்சார் பாதுகாப்பு சாவிகளை ஆண்ட்ராய்டு ஓரியோ அளிக்கிறது இதன்மூலம் ஃப்ளூடூத் அல்லது என்எப்சி பயன்படுத்தி உங்கள் ஃபோன் உடன் இணைந்திருக்க முடியும். இந்த அம்சம் டெவலப்பர்களால் அப்ளிகேஷன்களில் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இது மக்களின் வழக்கமான பயன்பாட்டிற்கு வருவதற்கு சில காலம் எடுத்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Google officially rolled out the next flavor of Android under a cookie name Oreo. In this article, we have compiled a list of security reasons that are present in the Android 8.0 Oreo.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X