சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் : நம்பி வாங்க 5 காரணங்கள்.!

|

புதிதாக அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் தான் கிட்டத்தட்ட அனைத்து தொழில்நுட்ப வட்டாரங்களிலும் உரையாடல் தலைப்பாக உள்ளது. இக்கருவியின் வருகைக்காக காத்திருந்த சாம்சங் பிரியர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இது உங்களுக்கான பிரத்யேக தொகுப்பாகும், அதாவது சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் சாதனத்தை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான ஐந்து காரணங்களை இங்கே உங்களுக்காக தொகுத்துள்ளோம்.

வெளியாகியுள்ள இந்த புதிய சாம்சங் கருவியானது அம்சங்களால் நிரம்பியுள்ளது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இப்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கும் இந்த கருவியானது அதே பிரிவில் (விலை நிர்ணயம்) உள்ள மற்ற போன்களுடன் ஒப்பிடப்படுக்கையில் உற்று நோக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன. அவைகள் என்ன.?? ஏன் இந்த தொலைபேசியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்?

எப் / 1.7 முதன்மை கேமரா

எப் / 1.7 முதன்மை கேமரா

இந்நிறுவனத்தின் இந்திய சந்தையில் நுழைவு முதலே அதன் ஸ்மார்ட்போன்களில் பிளாக்ஷிப் கேமராக்களை அமைக்க தவறியதில்லை. அப்படியாக ஆன் மேக்ஸ் சாதனத்திலும் அந்த மரபு பின்பற்ற ஒரு வியத்தகு நல்ல கேமரா அமைப்பை 13எம்பி ( எப் / 1.7) பின்புற கேமரா மற்றும் 13எம்பி (எப் / 1.9) முனபக்க கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் உள்ள வேறு எந்த ஸ்மார்ட்போன் இருட்டில் இவ்வளவு தெளிவான படங்களை கிளிக் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

சோஷியல் கேமரா மோட்

சோஷியல் கேமரா மோட்

இந்த சாதனத்தின் மிகவும் பயனுள்ள அம்சங்களில் ஒன்ராக இதன் சோஷியல் கேமரா மோட் திகழ்கிறது. இது நேரடி பில்டர்ஸ் மற்றும் ஸ்டிக்கர்களுடன் உடனடியாக படங்களை எடிட் செய்ய உதவுகிறது, மேலும் அவைகளை வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் பகிர தனித்துவமான ஒரு வழியாகவும் உள்ளது.

வியப்பான டிஸ்பிளே

வியப்பான டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய 14.47சென்டிமீட்டர் (5.7இன்ச்) முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) கொண்ட டிஸ்பிளே (அங்குலத்திற்கு 396 பிக்சல்கள் அடர்த்தி) கொண்டுள்ளது. இதன் மூலம் படங்கள் கூர்மையான மற்றும் மிருதுவானவைகளாக வெளிப்படும். மேலும் நீங்கள் திரைப்படம் பார்க்க விரும்பினால் அல்லது கேம்ஸ்கள் விளையாட விரும்பினால் புதியதொரு அனுபவத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள், பிரகாசமான சூரிய ஒளியில் கூட காட்சி தெளிவானதாக இருக்கும் ஆகையால் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனின் பிரைட்நஸ்தனை அடிக்கடி சரி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

உயர்ந்த செயல்திறன்

உயர்ந்த செயல்திறன்

நீங்கள் ஒரு கேம் பிரியர் அல்லது ஸ்மார்ட்போனை அதீத அளவில் பயன்படுத்துவீர்கள் என்றால் இந்த தொலைபேசி உங்களை கருத்தில் கொண்டே உருவாக்கம் பெற்றுள்ளது. 2.39ஜிகாஹெர்ட்ஸ், 1.69ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு கொண்டுள்ளதால் அனிமேஷன் வெண்ணெய் போன்றதொரு ஓட்டத்தையும், கிராபிக்ஸ் ஆச்சரியமான வண்ணத்திலும் வெளிப்படும்.

சரியான விலை

சரியான விலை

நம்பமுடியாத அம்சங்களை கொண்டுள்ள இந்த தொலைபேசியின் விலை ரூ.16,900/- ஆகும். ஒரு நம்பமுடியாத குறைந்த ஒளி கேமரா, 4 ஜிபி ரேம், மற்றும் ஒரு ஆக்டா-கோர் செயலி கொண்ட கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஒரு வைல்ட் டிவைஸ் ஆகும், ஆனால் சூப்பர் மலிவு விலையில் கிடக்கிறது.அம்சங்ககள் மற்றும் பிராண்டில் எந்த சமரசமும் செய்ய விரும்பாத எவருக்கும் சரியான ஒரு கருவியாக இது திகழ்கிறது.

Best Mobiles in India

English summary
5 reasons why you should get the Samsung Galaxy On Max. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X