சீனாக்காரன் செஞ்சி விட்டான்.. வெறும் ரூ.9999-க்கு சூப்பர் 5G Phone.. மொத்த இந்தியாவும் தட்டித்தூக்க போகுது!
பக்காவான பட்ஜெட் விலையில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் ஒட்டுமொத்த இந்தியர்களையும் குறிவைத்து ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.10,999-க்கு வாங்க கிடைக்கிறது. வங்கி சலுகையின்கீழ் ரூ.9999 க்கும் வாங்க கிடைக்கிறது.
ரூ.10999 என்பது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். இதே ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் அறிமுகமாகியுள்ளது. இது முறையே ரூ.12,499 க்கும் மற்றும் ரூ.14,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

இவ்வளவு குறைவான விலைக்கு கிடைக்கிறதே.. இந்த ரெட்மி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்கிற கேள்வி அல்லது குழப்பம் உங்களிடம் இருந்தால்.. கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்குவதற்கான 5 காரணங்கள் இதோ:
01. விலையை மீறிய டிசைன்: ரெட்மி 13சி 5ஜி டக்கென்று ஈர்க்கும் பேக் பேனல் டிசைனை கொண்டுள்ளது. ஒளி படும்போதும் - பச்சை மஞ்சள் நிறத்தின் பல்வேறு ஷேட்களில் - பளபளப்பான வடிவங்களையும், விளைவையும் உருவாக்குகிறது. கூடவே இதன் பேக் பேனல் நேர்த்தியான தோற்றத்தையும் பெற்றுள்ளது. எல்லாவற்றை விட முக்கியமாக இது மெலிதான மற்றும் இலகுரக வடிவமைப்பை பெற்றுள்ளது.

02. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பெரிய டிஸ்பிளே: ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனில் 6.74-இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளே (LCD Display) உள்ளது. சுவாரசியமாக இது 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை (600 nits Peak Brightness) வழங்குகிறது.இந்த விலைப்பிரிவில் இதுவொரு அசாதாரணமான அம்சமாகும்.
கூடவே இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடன் வருகிறது. ஒப்பீட்டளவில் இது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate) டிஸ்பிளேவை விட ஸ்மூத் ஆன விட ஸ்க்ரோலிங் மற்றும் நேவிகேட்டிங் அனுபவத்தை (Smooth scrolling and navigating experience) வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

03. திருப்திகரமான பெர்ஃபார்மென்ஸ்: ரெட்மி 13சி 5ஜி போனின் ஒட்டுமொத்த செயல்திறன் திருப்திகரமாக உள்ளது. சோஷியல் மீடியா ஆப்களை ஸ்க்ரோலிங் செய்தல், வாட்ஸ்அப்பில் சாட் செய்தல் மற்றும் வீடியோக்களை பார்ப்பது போன்ற அடிப்படை பணிகளில் எந்த பிரச்சினையும் இருக்காது. சப்வே சர்ஃபர்ஸ் போன்ற சாதாரண கேம்களில் எந்த சிக்கலும் இருக்காது
04. தேவைகளை பூர்த்தி செய்யும் பேட்டரி: ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. வழக்கமான பயன்பாட்டின் போது பெரும்பாலும் இது முழு நாளுக்கும் நீடிக்கிறது. கூடவே இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டுள்ளது. இருப்பினும் ரீடெயில் பாக்ஸில் உள்ள சார்ஜர் 10W திறனுடன் வருகிறது.

05. நல்ல லைட்டிங்கில் நல்ல அவுட்புட்களை வழங்கும் கேமரா: ரெட்மி 13சி 5ஜி மாடலில் சிறந்த, ஆல்-ரவுண்ட் கேமரா செட்டப் உள்ளது என்று கூற முடியாது. மாறாக சரியான வெளிச்சத்தில் போதுமான அளவு வேலை செய்யும் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது என்று கூறலாம். இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. இது நல்ல லைட்டிங்கில் விரிவான மற்றும் வண்ணமயமான காட்சிகளை வழங்குகிறது.
ரெட்மி 13சி 5ஜி உடன் சேர்த்து ரெட்மி 13சி 4ஜி மாடலும் அறிமுகமாகியுள்ளது. 5ஜி வேரியண்ட்டை போலவே இதுவும் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமாகியுள்ளது. 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,499 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








