மற்ற போன்களை கலங்கடிக்கும் புதிய வரவு, லாவா எக்ஸ்81.!!

By Meganathan
|

லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் தான் எக்ஸ்81, அழகு மற்றும் சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் படி இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியை ஏற்படுத்தும் அதிநவீன அம்சங்கள், அழகான வடிவமைப்பு மற்றும் யுனிபாடி மெட்டல் வடிவமைப்புக் கொண்டு மற்ற நிறுவனங்களை விடத் தனித்து நிற்கும் படி லாவா எக்ஸ்81 இருக்கின்றது.

ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.11,500 என்ற விலையில் கிடைக்கும் லாவா எக்ஸ்81 கருவியை வாங்க தூண்டும் முக்கியச் சிறப்பம்சங்கள் ஸ்லைடர்களில்..

01

01

அழகான மெட்டல் வடிவமைப்பு இந்த கருவியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கின்றது. சில்வர் பேக் பேனல் மற்றும் வளைந்த எட்ஜ் போன்றவை இதன் அழகை கூட்டுகின்றது. சிம் ஸ்லாட் மற்றும் பேட்டரி பேக் பேனலில் பொருத்தப்பட்டுள்ளது.

02

02

இந்த கருவி 5 இன்ச் ஐபிஎஸ் 2.5D வளைந்த கிளாஸ், ஃபுல் எச்டி ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் திரை பாதுகாக்கப்படுகின்றது. மற்ற கருவிகளை விட மெலிதான வடிவமைப்பு கொண்டுள்ளது. 12.7 செமீ போன் திரை கருவியை ஒரே கையில் பயன்படுத்த வழி செய்கின்றது.

03

03

1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம், 16 ஜிபி ரோம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

04

04

13 எம்பி ப்ரைமரி கேமரா, பிளாஷ் மற்றும் பியூட்டி-ஃபோகஸ் மற்றும் பிக்ச்சர்-ஃபோகஸ் போன்ற அம்சங்களும் ஸ்லோ மோஷன் மற்றும் டைம் லேப்ஸ் வீடியோ அம்சம் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன. இதோடு 5 எம்பி செல்பீ கேமரா, வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

05

05

மற்ற கருவிகளை போன்று இல்லாமல் இந்த கருவியானது நேரடியாக மார்ஷ்மல்லோ 6.0 இயங்குதளம் கொண்டிருக்கின்றது. இதோடு இந்த கருவியானது சொந்தமான ஸ்டார் OS 3.0 UI வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
5 Reasons why Lava X81 will create a lasting impression Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X