Home
Mobile

குறைந்த விலை, விலை உயர்ந்த அம்சங்கள் : அசத்தும் புதிய ஸ்மார்ட்போன்.!!

By Meganathan

ஹானர் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான 5சி ஸ்மார்ட்போன் தனது அட்டகாசமான அம்சங்கள் மூலம் அதிகளவு வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் ஆன்லைன் பிரான்டான ஹானர் பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் 5சி கிரின் 650 சிப்செட் கொண்டிருக்கின்றது. இது போன்ற சிப்செட் விலை உயர்ந்த கருவிகளில் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஹானர் 5சி கருவியின் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 5சி கருவியின் மிகச்சிறந்த அம்சமாகக் கிரின் 650 சிபியு இருக்கின்றது. அதக சக்திவாய்ந்த பிராசஸர் என்பதால் கருவியின் வேகம் சீராக இருப்பதோடு சிறந்த பேட்டரி பேக்கப் கிடைக்கின்றது. இதோடு கிரின் 650 சிப்செட் என்னென்ன செய்யும் என்பதை ஸ்லைடர்களில் விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

மெட்டல்

மெட்டல்

ரூ.10,000 - ரூ.15,000 பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகப் போட்டி நிலவுகின்றது. இருந்தும் பல்வேறு கருவிகளிலும் பிளாஸ்டிக் மற்றும் சுமாரான வடிவமைப்புக் கொண்டிருக்கும். ஆனால் ஹானர் 5சி கருவி ஏர்கிராஃப்ட் தரம் கொண்ட அலுமினியம்-அல்லாய்க் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் சக்திவாய்ந்த பிராசஸர் கொண்டிருப்பதோடு கருவி சூடாகாமல் இருக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

இயக்கம்

இயக்கம்

கிரின் 650 சிப்செட் FinFET மற்றும் 16nm சிப் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. 16nm சிப்செட் அதிவேகமாக இயங்குவதோடு மல்டி டாஸ்கிங் செய்யும் போது சீராக இயங்குகின்றது.

கேமிங்

கேமிங்

அதிகளவு கேமிங் விளையாட ஏதுவாக ஹானர் 5சி கருவியில் Mali-T830 GPU தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய பதிப்பான கிரின் 620 சிப்செட்'களை விடச் சிறப்பாக இயங்குகின்றது.

புகைப்படம்

புகைப்படம்

ஹானர் 5சி கருவியைப் பொருத்த வரை 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் அழகான புகைப்படம் எடுக்க வழி செய்யும் பல்வேறு கேமரா அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

பேட்டரி

பேட்டரி

சீரான இயக்கம் வழங்கும் கிரின் 650 சிப்செட் அதிகளவு பேட்டரி பேக்கப் கிடைக்கின்றது. ஹானர் 5சி கருவி 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் அதிகளவு பேட்டரி கொண்ட கருவியாக ஹானர் 5சி இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
5 Reasons Why Honor 5C has the most powerful chipset at this price range Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X