Home
Mobile

புதிய Motorola எட்ஜ் 40 5ஜி.. கண்ணை மூடிட்டு வாங்க 5 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 1 காரணம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டோரோலா எட்ஜ் 40 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த போன் வரும் மே 30-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இணையதளத்தில் விற்பனை வரும்.பின்பு இந்த போனின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது.

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனை "கண்களை மூடிக்கொண்டு" வாங்குவதற்கான 5 காரணங்கள் உள்ளன. பின்பு இதை வாங்காமல் தவிர்க்க 1 காரணம் உள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய Motorola எட்ஜ் 40  5ஜி.. கண்ணை மூடிட்டு வாங்க 5 காரணங்கள்.!

முதல் காரணம்: பட்ஜெட் விலையில் தரமான கேமரா வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் இரவு நேரங்களில் கூட துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக மற்ற போன்களை விட அருமையான செல்பி படங்களை எடுக்க உதவுகிறது இந்த போன். பின்பு பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. அதேபோல் எல்இடி பிளாஷ் ஆதரவும் கொண்டுள்ளது இந்த அசத்தலான போன்.

இரண்டாவது காரணம்: பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி வளைந்த pOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இந்த டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் வழங்கும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த டிஸ்பிளேவை வேகமாக இயக்க முடியும், அதற்குத் தகுந்தபடி 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உதவி செய்யும்.

புதிய Motorola எட்ஜ் 40  5ஜி.. கண்ணை மூடிட்டு வாங்க 5 காரணங்கள்.!

மூன்றாவது காரணம்: இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் ஆனது மிகவும் வேகமானது மற்றும் மென்மையான செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் ஆப்ஸ்களை இதில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது காரணம்: இந்த போன் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. அதாவது தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி68 சான்றிதழ் உடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போனில் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

ஐந்தாவது காரணம்: மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் ஆனது 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு 5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங், 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் சார்ஜிங் வசதியில் அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய Motorola எட்ஜ் 40  5ஜி.. கண்ணை மூடிட்டு வாங்க 5 காரணங்கள்.!

வாங்காமல் தவிர்க்க 1 காரணம்: இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 5ஜி போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளன. ஆனால் பேட்டரி விஷயத்தில் சொதப்பி உள்ளது மோட்டோரோலா. அதாவது இந்த போன் 4400 எம்ஏஎச் பேட்டரியடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே போன்றவற்றுடன் இந்த பேட்டரி ஒரு நாள் கூட நீடிக்காது. அதாவது விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 reasons to buy the new Motorola Edge 40 5G phone.. 1 reason not to buy : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X