Home
Mobile

ஆபர் விலையில் OnePlus 11R விற்பனை ஆரம்பம்.. கண்களை மூடிக்கொண்டு வாங்க 5 காரணங்கள்!

சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் 2 புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. அதில் ஒன்பிளஸ் 11 5ஜி-யின் இந்திய விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், அதனுடன் சேர்ந்து அறிமுகமான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி-யின் விற்பனையும் இன்று (பிப்.18) முதல் தொடங்கியது!

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனானது நிறுவனத்தின் சொந்த வலைத்தளமான ஒன்பிளஸ்.இன் (OnePlus.in), ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் (OnePlus Store App), ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் (OnePlus Experience Stores) மற்றும் அமேசான் (Amazon) வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆபர் விலையில் OnePlus 11R விற்பனை ஆரம்பம்.. வாங்கலாமா?

OnePlus 11R விலை

ஒன்பிளஸ் 11ஆர் 8ஜிபி + 16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி + 256ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். பேஸிக் மாடலின் விலை ரூ 39,999 என்றும், டாப் என்ற மாடலின் விலை ரூ.44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கலாக்டிக் சில்வர், சோனிக் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும்.

OnePlus 11R மீது கிடைக்கும் வங்கி சலுகைகள்

ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் அமேசானில் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளின் வழியாக ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிட்டிபேங்க் கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தி ஒன்பிளஸ் 11ஆர்-ஐ வாங்கினாலும் கூட ரூ.1,000 உடனடி தள்ளுபடியை பெறலாம். இதுதவிர மற்ற முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் 12 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கும்.

OnePlus 11R மீது கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.3000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் (Exchange Bonus) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற உங்களுடைய பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அல்லது சாம்சங் ஸ்மார்ட்போன் அல்லது வேறு ஏதேனும் ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டி இருக்கும்.

OnePlus 11R மீது கிடைக்கும் ரெட் கேபிள் ஆபர்கள்

ரெட் கேபிள் மெம்பர்களுக்கான (Red Cable Members) சலுகைகளை பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்பிளஸ் 11ஆர் மீது ரூ.2,000 வரையிலான தள்ளுபடியை பெறலாம். மேலும் ரெட் கேபிள் (Red Cable Care) கேர் வழியாக 12 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, 120 ஜிபி க்ளவுட் ஸ்டோரேஜ் போன்ற நன்மைகளை வெறும் ரூ.999-க்கு பெறலாம்.

ஒன்பிளஸ்.இன் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் வழியாக ஒன்பிளஸ் 11ஆர்-ஐ வாங்கினால் 6 மாத ஸ்பாட்டிஃபை பிரீமியம் சந்தாவை (Spotify Premium Subscription) இலவசமாக பெறலாம். மேலும், ஒன்பிளஸ் 11ஆர்-ஐ வாங்கும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் கேமிங் ட்ரிக்கரும் (OnePlus Gaming Trigger) இலவசமாக கிடைக்கும்.

OnePlus 11R ஸ்மார்ட்போனை நம்பி வாங்க 5 காரணங்கள்

01. மிட் ரேன்ஜ விலையில் பிரீமியம் டிசைன்
02. பிளாக்ஷிப் போன்ற தரமான டிஸ்பிளே
03. குறையே சொல்ல முடியாத மெயின் கேமரா
04. மிகவும் பயனுள்ள அலெர்ட் ஸ்லைடர் (மீண்டும் வந்துள்ளது)
05. 25 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்யும் 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்.

Best Mobiles in India

English summary
5 Reasons To Buy OnePlus 11R 5G Without Any Hesitation India Sale Starts From Today Check All Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X