Home
Mobile

ஆபர் விலையில் OnePlus 11 விற்பனை.. கண்ணை மூடிக்கிட்டு வாங்க 1 இல்ல 5 காரணங்கள் இருக்கு!

இம்மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனின் ஓப்பன் சேல் (Open Sale) இன்று முதல், அதாவது பிப்ரவரி 14 முதல் தொடங்கி உள்ளது. இது விலைக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் தானா என்கிற சந்தேகம் உங்களிடம் இருந்தால்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

ஏனென்றால், ஒன்பிளஸ் 115ஜி மாடலை ஏன் நம்பி வாங்கலாம் என்கிற 5 முக்கியமான காரணங்களை பற்றி அலசும் பையிங் கைடு (Buying Guide) கட்டுரையே இது. முதலில் ஒன்பிளஸ் 11-ன் விலை விவரங்கள் மற்றும் அதன் மீது கிடைக்கும் சலுகைகளை பற்றி பார்த்துவிடலாம்!

OnePlus 11: கண்ணை மூடிக்கிட்டு வாங்க 1 இல்ல 5 காரணங்கள் இருக்கு!

OnePlus 11 5G விலை & விற்பனை சலுகைகள்

மற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போலவே ஒன்பிளஸ் 11 5ஜி மாடலும் அமேசான்.இன் (Amazon.in) வழியாக வாங்க கிடைக்கிறது. இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வெளியாகியுள்ளது; 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.56,999 என்றும், 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ 61,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் நீங்கள் ஐசிஐசிஐ (ICICI) பேங்க் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தினால், இஎம்ஐ மற்றும் நான்-இஎம்ஐ பரிவர்த்தனைகளின் கீழ் ரூ.1,000 என்கிற உடனடி தள்ளுபடியை பெறலாம். இந்த சலுகையின் கீழ் 8ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.55,999 மற்றும் 12ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.60,999 என்கிற ஆபர் விலையில் வாங்கலாம்!

சரி வாருங்கள், ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்கிற 5 காணரங்களை பற்றி பார்ப்போம்:

OnePlus 11: கண்ணை மூடிக்கிட்டு வாங்க 1 இல்ல 5 காரணங்கள் இருக்கு!

01. OnePlus 11 இல் உள்ள Hasselblad கேமரா

ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு கேமரா மிகவும் முக்கியம். அந்த விஷயத்தில் ஒன்பிளஸ் 11 5ஜி-யில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது ஹசல்ப்ளாட் (Hasselblad) நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்து அதன் கேமராக்களை உருவாக்கியுள்ளது.

02. OnePlus 11 இல் உள்ள அலெர்ட் ஸ்லைடர்

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான அலெர்ட் ஸ்லைடர் அம்சத்தை ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் மீண்டும் கொண்டு வந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது ஒன்பிளஸ் 10 சீரீஸில் காணப்படவில்லை.

அறியாதோர்களுக்கு, அலெர்ட் ஸ்லைடர் என்பது ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் அமைந்துள்ள ஒரு பிஸிக்கல் ஸ்விட்ச் (Physical Switch) ஆகும். இது ஸ்மார்ட்போனை ம்யூட் செய்யவோ, வைப்ரேட்டில் வைக்கவோ அல்லது ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யாமலேயே ரிங் மோடிற்கு மாற்றவோ, அலாரத்தை அணைக்கவோ, இப்படி பல வேலைகளை மிகவும் எளிமையாக செய்ய அனுமதிக்கும்.

03. OnePlus 11 க்கு கிடைக்கும் சாஃப்ட்வேர் அப்டேட்ஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனிற்கு 4 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளது.

OnePlus 11: கண்ணை மூடிக்கிட்டு வாங்க 1 இல்ல 5 காரணங்கள் இருக்கு!

04. OnePlus 11 இன்செயல்திறன்

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் குவால்காமின் லேட்டஸ்ட் 5ஜி சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் உள்ளது. இது 35% வேகமான சிபியு, 25% மேம்படுத்தப்பட்ட ஜிபியு-வை வழங்குகிறது.

போதாக்குறைக்கு இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே மல்டி-டாஸ்கிங் மற்றும் கேமிங்கின் போது எந்த குறையும் இருக்காது!

05. OnePlus 11 இல் உள்ள 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

கடைசியாக, ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, வெறும் 25 நிமிடங்களில் 0 - 100% பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.

Best Mobiles in India

English summary
5 Reasons to buy OnePlus 11 5G Smartphone Without Any Hesitation
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X