Home
Mobile

ரூ.19,999 க்கு கிடைக்கும் Nothing Phone 2a.. நம்பி வாங்க 5 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்!

கடந்த வாரம், நத்திங் நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்போனாக அறிமுகமான நத்திங் போன் 2ஏ-வின் இந்திய விற்பனை இன்று (மார்ச் 12) முதல் தொடங்குகிறது. ரூ.40,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,000-க்குள் அறிமுகமாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மாடலின் அசல் வெளியீட்டு விலை ரூ 23,999 ஆகும். இருப்பினும் இதை ரூ.19,999 என்கிற சலுகை விலையில் வாங்க முடியும். அதெப்படி? என்பதோடு சேர்த்து.. நத்திங் போன் 2எ மாடலை ஏன் நம்பி வாங்கலாம் என்கிற 5 காரணங்களும், ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்கிற 2 நியாயமான காரணங்களும் இதோ:

Nothing Phone 2a.. நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

மார்ச் 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும் நத்திங் போன் 2ஏ மாடலின் விற்பனையின் போது இது ரூ.23,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த சலுகை விலையை பெற, நீங்கள் எச்டிஎப்சி பேங்க் கார்டு வழியாக கிடைக்கும் ரூ.2000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ.2000 எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியை சரியாக பயன்படுதத வேண்டும்.

நத்திங் போன் 2ஏ-வின் வெளியீட்டு விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Nothing Phone 2a.. நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

நம்பி வாங்க 5 காரணங்கள்:
01. இது நம்ப முடியாத அளவிற்கு லைட்வெயிட் டிசைனை பெற்றுள்ளது.
02. சிறந்த சாஃப்ட்வேர் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது
03. இது நேர்த்தியாக செயல்படுத்தப்பட்ட கிளிஃப் லைட்ஸ்களை கொண்டுள்ளது
04. நல்ல பேட்டரி லைஃப்பை வழங்குகிறது
05. பகல் நேரங்களில் இதன் கேமராக்கள் நல்ல அவுட்புட்களை வழங்குகின்றன.

வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்:
01. பகலில், நல்ல ஒளி நிலைமைகளில் சிறப்பாக செயல்படும் இதன் கேமரா செட்டப் ஆனது இரவு நேரங்களில், குறைந்த வெளிச்சம் கொண்ட பகுதிகளில் சராசரியான அவுட்புட்களையே வழங்குகிறது.
02. இதன் பேக் பேனலில், எளிதாக கறைபடிகிறது மற்றும் அதில் மிகவும் எழுத்தாக கீறல்கள் விழுகின்றன.

Nothing Phone 2a.. நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: வடிவமைப்பை பொறுத்தவரை, இதன் பேக் பேனலில், ஒரு சர்குலர் ஐலேண்டில், கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள 2 கேமராக்களை கொண்டுள்ளது. இதுதவிர்த்து பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களையும் (Glyph LED strips) கொண்டுள்ளது. இது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நத்திங் போன் 2ஏ-வில் ஃபுல்எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10 சப்போர்ட் உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. டிஸ்பிளேவில் உள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃ பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.

Nothing Phone 2a.. நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

கேமராக்களை பொறுத்தவரை இதில் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. நத்திங் நிறுவனமானது இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளது. இப்போதைக்கு இது ஆண்ட்ராய்டு 14 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 கொண்டு இயங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 Reasons to buy Nothing Phone 2a Smartphone and 2 Reasons to Skip it
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X