1 இல்ல.. 5 காரணங்கள் இருக்கு.. இந்த போனை கண்ணை மூடிக்கிட்டு வாங்குறதுக்கு!

|

பட்ஜெட் விலையிலான ஒரு ஸ்மார்ட்போனை (Budget Smartphone) வாங்க வேண்டும் என்றால், அதில் சில அம்சங்களை சமரசம் செய்ய வேண்டி இருக்கும் என்கிற நிலையை மாற்றும்படியான ஒரு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது சாம்சங் (Samsung) நிறுவனத்தின் கேலக்ஸி எம்04 (Galaxy M04) மாடல் ஆகும். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்று கேட்பவர்களுக்கு 1 காரணம் அல்ல, மொத்தம் 5 காரணங்களை சொல்ல முடியும்!

முதல் காரணம்: இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ரேம் பிளஸ் (RAM Plus) அம்சம் ஆகும். ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போனில் 8ஜிபி அளவிலான ரேம் இருக்கிறது என்று கூறினால் சிலர் நம்பாமல் போகலாம். ஆனால் அதுதான் உண்மை. அறியதோர்களுக்கு ரேம் பிளஸ் என்பது இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து சில ஜிபிகளை (GB) கடன் வாங்கி அதை ரேம் ஆக பயன்படுத்த உதவும் ஒரு அம்சம் ஆகும். இப்படி இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் Samsung Galaxy M04 ஸ்மார்ட்போனில் பின்னடைவு (Hang) என்கிற வார்த்தைக்கே இடமிருக்காது!

1 இல்ல 5 காரணங்கள் இருக்கு இந்த போனை கண்ணை மூடிக்கிட்டு வாங்குறதுக்கு!

இரண்டாவது காரணம்: மிகப்பெரிய 128GB ஸ்டோரேஜ், அதுவும் 1TB வரை விரிவாக்கக்கூடிய ஆதரவுடன்! சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போன் ஆனது "பொதுவான" பட்ஜெட் ஸ்மார்ட்போனில் நாமெல்லாம் சந்திக்கும் ஸ்டோரேஜ் சிக்கல்களுக்கு குட்-பை சொல்லும் ஒரு மாடல் ஆகும். ஏனெனில் இந்த போனில் 128GB என்கிற அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. அதை 1TB வரை விரிவாக்கவும் செய்யலாம். ஆகமொத்தம் போட்டோக்களுக்கு ஸ்பேஸ் இல்லை, வீடியோக்களுக்கு ஸ்பேஸ் இல்லை என்கிற தொல்லையே இருக்காது!

மூன்றாவது காரணம்: இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த வாக்குறுதி, இந்த ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு இந்த போனின் செயல்திறனையும் மேம்படுத்தும். ஆக, பட்ஜெட் போன்கள் என்றாலே அதையே அடுத்த 1 வருடத்திற்கு பயன்படுத்தினாலே பெரிது என்கிற பேச்சுக்கு இனியும் இடம் இல்லை!

நான்காவது காரணம்: இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயக்கப்படுகிறது. ரூ.10,000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் மீதமுள்ள ஸ்மார்ட்போன்கள் எல்லாமே பழைய ஓஎஸ்-ஐயே பேக் செய்கின்றன. ஆனால் சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உள்ளது. இது மென்மையான செயல்திறன் மற்றும் ஹை-எண்ட் மொபைல் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.

ஐந்தாவது காரணம்: இதில் உள்ள 5000mAh பேட்டரி. நிறைய ஸ்மார்ட்போன்களில் 5000mAh பேட்டரி இடம்பெறுகிறது தான் என்றாலும் கூட ஒரு 8ஜிபி ரேம், லேட்டஸ் ஓஎஸ் உடன் இணையும் 5000mAh பேட்டரி ஆனது அந்த ஸ்மார்ட்போனின் பெர்ஃபார்மென்ஸை வேறொரு கட்டத்திற்கு கொண்டு செல்லும். அப்படியான ஒரு ஸ்மார்ட்போன் தான் இந்த சாம்சங் கேலக்ஸி எம்04 மாடல் ஆகும்!

ஒட்டுமொத்தமாக இதை ஒரு பட்ஜெட் விலை ஆல் ரவுண்டர் என்றே கூறலாம். நாம் மேலே பார்த்த தனித்துவமான அம்சங்களைத் தவிர, Galaxy M04 ஆனது 6.5 இன்ச் அளவிலான HD+ டிஸ்ப்ளே, 13எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 5எம்பி செல்பீ கேமரா போன்ற அம்சங்களையும் வழங்குகிறது. சீ கிளாஸ் க்ரீன் மற்றும் ஷேடோ ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8499 மட்டுமே ஆகும்!

Best Mobiles in India

English summary
5 Reasons To Buy New Samsung Galaxy M04 Smartphone Priced Under Rs 10000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X