Home
Mobile

1 இல்ல.. 2 இல்ல.. OnePlus 12-ஐ கண்ண மூடிக்கிட்டு வாங்க 5 காரணங்கள்.. ஜன.30 முதல் விற்பனை! என்ன விலை?

சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த 2024 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மாடலும் ஒன்றாகும். இது மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ், 2024 ஜனவரி 30 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

இதற்கிடையில், "ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா?" என்கிற கேள்விக்கு.. வளவளவென்று பேசாமல்.. மிகவும் சுருக்கமான பதிலை தேடிக்கொண்டு இருப்பவர்களில் நீங்களும் ஒருவரா? ஆம் என்றால், ஒன்பிளஸ் 12-ஐ ஏன் கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம் என்பதற்கான 5 'நச்' காரணங்கள் இதோ:

OnePlus 12-ஐ கண்ண மூடிக்கிட்டு வாங்க 5 காரணங்கள்!

முதல் காரணம்: ஆல்-நியூ டிசைன் அல்ல.. ஆனாலும்? ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய வடிவமைப்பை பெறவில்லை. ஆனால் சில நுட்பமான மாற்றங்கள் இந்த ஸ்மார்ட்போனின் அழகியலை மேம்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 12 ஆனது ஒன்பிளஸ் 11 மாடலை போன்றே வட்ட வடிவிலான கேமரா மாட்யூலை கொண்டுள்ளது. சென்சார்களுக்கு மேல் உள்ள கிளாஸ் பிளேட் நேர்த்தியை சேர்க்கிறது.

பேக் பேனலின் மென்மையான மேட் பினிஷ், குறிப்பாக ஃப்ளோவி எமரால்டு வகலர் ஆப்ஷனில் ஒரு ஆடம்பரமான லுக்கை வழங்குகிறது. ஸ்மார்ட்போனின் வளைவுகள் மற்றும் நேர்த்தியான மெட்டல் ஃப்ரேம் நேர்த்தியையும், பாதுகாப்பான பிடிமானத்தையும் வழங்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இதன் மென்மையான மேட் பினிஷ் கைரேகைகளை எதிர்க்கிறது.

OnePlus 12-ஐ கண்ண மூடிக்கிட்டு வாங்க 5 காரணங்கள்!

இரண்டாவது காரணம்: மார்க்கெட்டிலேயே சிறந்த டிஸ்பிளே! ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவு உடனான 6.82-இன்ச் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கோட்பாட்டளவில், இதுதான் சந்தையில் கிடைக்கும் மிகவும் பிரகாசமான டிஸ்பிளேவாகும். ஏனெனில் இது 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் நுட்பமான கர்வ்டு டிஸ்பிளேவானது பிளாட்-ஸ்கிரீன் ஸ்டைலில் இருந்து விலகியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. டால்பி அட்மாஸ் ஆதரவுடன் கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் அதிக ஒலியில் கூட உரத்த மற்றும் மிருதுவான ஒலியை வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக இந்த போன், வீடியோ ஸ்ட்ரீமிங் செய்வதற்கான சிறந்த தேர்வாகும்!

OnePlus 12-ஐ கண்ண மூடிக்கிட்டு வாங்க 5 காரணங்கள்!

மூன்றாவது காரணம்: பிரமானதான பெர்ஃபார்மென்ஸ்! ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்கிறது, பெர்ஃபார்மென்ஸை பொறுத்தவரை இது உண்மையிலேயே பிரமாதமாக உள்ளது. குறிப்பாக பேலன்ஸ்டு பெர்ஃபார்மன்ஸ் மோட்-ன் கீழ் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் (ஹீட்டிங் சிக்கல் இல்லாமல்) கூல் ஆக இருக்கிறது மற்றும் குறைந்த அளவிலான பேட்டரியை மட்டுமே உபயோகிக்கிறது.

ஒன்பிளஸ் 12-ல் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் 14 ஓஎஸ் உடன் வருகிறது. இதில் எரிச்சலூட்டும் ப்ளோட்வேர் இல்லாத க்ளீன் ஆன இன்டர்பேஸ் உள்ளது. மேலும் ஆக்ஸிஜன் 14 ஓஎஸ்-ல் புதிய அனிமேஷன்கள் மற்றும் கஷ்டமைசேஷன் விருப்பங்களும் அணுக கிடைக்கிறது.

நான்காவது காரணம்: நீண்ட நேரம் நீடிக்கும் பெரிய பேட்டரி மற்றும் டக்கென்று சார்ஜ் செய்யும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு! ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய 5400mAh பேட்டரியை கொண்டுள்ளது. வழக்கமான பயன்பாட்டின்கீழ் (ஒரேயடியாக 10 மணிநேரம் கேமிங் செய்யாத பட்சத்தில்) இது முழுமையாக ஒரு நாள் மற்றும் இன்னும் சில நேரம் நீடிக்கும்.

கூடவே இது அதிவேக 100W சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இங்கே கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் 100W சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், சாம்சங், ஆப்பிள் உட்பட பல பெரிய நிறுவனங்கள் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர்களை அனுப்புவதை நிறுத்திவிட்டன.

ஐந்தாவது காரணம்: கேமராக்களில் செய்யப்பட்டுள்ள அப்கிரேட்கள்! ஒவ்வொரு ஆண்டும் ஒன்பிளஸ் தனது ஃபிளாக்ஷிப் போன்களில் கேமராக்களை மேம்படுத்தி வருகிறது. அதே போக்கு ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிலும் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த போனில் 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா + 3எக்ஸ் பெரிஸ்கோப் அல்லது ஆப்டிகல் ஜூம் கொண்ட 64எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் கேமரா உள்ளது.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் மெயின் கேமராவானது நல்ல வெளிச்சத்தில் மட்டுமல்ல குறைந்த வெளிச்சத்திலும் கூட சிறப்பான போட்டோக்களை எடுக்கிறது. டெலிபோட்டோ கேமராவின் 3எக்ஸ் ஜூமிங் அருமையாக உள்ளது. ஷார்ப் ஆன எட்ஜ்களுடன் வைட்-ஆங்கிள் கேமராவும் கூட சிறப்பான அவுட்புட்களை வழங்குகிறது. முன்பக்கத்தில் உள்ள 32எம்பி செல்பீ கேமரா "வழக்கமான" அவுட்புட்களை வழங்குகிறது.

ஒன்பிளஸ் 12-ஐ நம்பி வாங்கலாமா? ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன், இந்திய நுகர்வோருக்கான ஒரு அருமையான ஸ்மார்ட்போன் எண்பத்தில் சந்தேகமே வேண்டாம். இன்னும் ஓப்பன் ஆக சொல்லவேண்டும் என்றால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்24 மற்றும் கேலக்ஸி எஸ்24 பிளஸை விட எல்லா வகையிலும் சிறந்ததாக உள்ளது.

ஏனென்றால் மேற்கண்ட 2 சீரீஸ் சாம்சங் போன்களுமே அதிக விலை நிர்ணயத்தை கொண்டிருந்தாலும் கூட எக்ஸினோஸ் சிப்செட் உடன் வருகின்றன. மேலும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ மாடல்களை விடவும் சற்றே சிறந்ததாக உள்ளது (இருப்பினும் கேமரா பெர்ஃபார்மென்ஸ் என்று வந்துவிட்டால் பிக்சல் போன்கள்தான் பெஸ்ட்!)

More from GizBot

Best Mobiles in India

English summary
5 reasons to buy new oneplus 12 smartphone without any hesitation india sale starts from jan 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X