Home
Mobile

Moto-வின் புது வேட்டைக்காரன்.. Edge 50 Pro 5G-ஐ நம்பி வாங்க 5 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்!

மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலாகவும், விலையை மீறிய பல "முரட்டு" அம்சங்களுடனும் அறிமுகமான.. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி (Motorola Edge 50 Pro 5G) மாடலின் இந்திய விற்பனை.. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மோட்டோரோலா.இன் வலைத்தளம் வழியாக தொடங்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் மீது உங்களுக்கு ஒரு கண் இருந்தால்.. கூடவே இதை வாங்கலாமா என்கிற சந்தேகம் இருந்தால்.. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 5 காரணங்களும், ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான 2 காரணங்களும் இதோ:

Motorola Edge 50 Pro 5G-ஐ நம்பி வாங்க 5 காரணங்கள்!

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி-யின் விலை, விற்பனை சலுகைகள்: இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.31,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது (இதன் ரீடெயில் பாக்ஸில் 68W சார்ஜர் இடம்பெறும்). மறுகையில் உள்ள 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.35,999 ஆகும் (இதன் ரீடெயில் பாக்ஸில் 125W சார்ஜர் இடம்பெறும்).

அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, பேஸிக் 8ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.27,999 க்கும், 12ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.31,999 க்கும் வாங்க கிடைக்கும். இரண்டுமே பிளாக் பியூட்டி, லக்ஸ் லாவெண்டர் மற்றும் மூன்லைட் பேர்ல் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

Motorola Edge 50 Pro 5G-ஐ நம்பி வாங்க 5 காரணங்கள்!

கூடுதல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பொறுத்தவரை.. பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.2,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். மேலும் எச்டிஎப்சி பேங்க் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,250 தள்ளுபடியும் கிடைக்கும்.

நம்பி வாங்க 5 காரணங்கள்:
1. இது "டாப் டக்கர்" என்று கூறுபடியாக மிகவும் அற்புதமான.. கண்களை கவரும் டிசைனை பெற்றுள்ளது.
2. 144ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான இதன் டிஸ்பிளே வேற லெவல் எக்ஸ் பீரியன்ஸை வழங்குகிறது.
3. இது பலரும் எதிர்பார்க்கும் ஒரு முக்கிய அம்சமான.. நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங் உடன் வருகிறது.

Motorola Edge 50 Pro 5G-ஐ நம்பி வாங்க 5 காரணங்கள்!

4. ஓஐஎஸ் ஆதரவு உடனான இதன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் ஆனது இம்ப்ரெஸிவ் ஆன அவுட்புட்களை வழங்குகிறது.
5. பேஸிக் வேரியண்ட் உடன் வரும் 50W மற்றும் ஹை-எண்ட் வேரியண்ட் உடன் 125W ஆகிய இரண்டு பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமுமே மிகவும் வேகமான சார்ஜிங் ஸ்பீடை வழங்குகின்றன.

வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்:
1. இதே விலைப்பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் மற்ற சில போன்களுடன் ஒப்பிடும் போது இதன் பெர்ஃபார்மென்ஸ் ஒருபடி கீழே உள்ளது.
2. ரியர் கேமரா செட்டப் ஆனது தரமான புகைப்படங்களை வழங்கினாலும் கூட, அதே அளவிலான புகைப்படங்களை இதன் செல்பீ கேமராவால் எதிர்பார்க்க கூடாது!

Motorola Edge 50 Pro 5G-ஐ நம்பி வாங்க 5 காரணங்கள்!

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி-யின் விரிவான அம்சங்கள்: ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 முக்கிய ஓஎஸ் அப்டேட்ஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உடனான 6.7-இன்ச் 1.5K pOLED கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் + 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் உள்ளன.

Motorola Edge 50 Pro 5G-ஐ நம்பி வாங்க 5 காரணங்கள்!

முன்பக்கத்தில், குவாட்-பிக்சல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி68-ரேடிங்கையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 125W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் டர்போ சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 4,500எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. 12ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 125W சார்ஜர் வரும்; 8ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 68W சார்ஜர் வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 Reasons to Buy Motorola Edge 50 Pro 5G and 2 Small Flaws to Know before Buying this Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X