சார்ஜரால் வந்த சிக்கல்.. CMF Phone 1-ஐ வாங்க போறீங்களா? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க.. இல்லனா?
ஸ்மார்ட்போன் பிரியர்கள் மற்றும் ஆர்வலர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்.. சிஎம்எப் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இந்திய சந்தையில் அறிமுகமானது. மாற்றக்கூடிய பேக் கவர் (Interchangeable Back Cover) மற்றும் தனித்துவமான டிசனுடன் (Unique Design) உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது பிளாக், ப்ளூ, லைட் க்ரீன் மற்றும் ஆரஞ்சு என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் ஜூலை 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் சிஎம்எப் இந்தியா இணையதளம் (CMF India Website) வழியாக விற்பனைக்கு வரவுள்ளது.

ஒருவேளை இந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு இருந்தால்.. இதை ஏன் நம்பி வாங்கலாம் என்கிற 5 நல்ல காரணங்களோடு சேர்த்து, ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்கிற 4 நியாயமான காரணங்களையும் அறிந்துகொள்வது நல்லது. கூடவே சிஎம்எப் போன் 1-க்கான பெஸ்ட் ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்களின் பட்டியலையும் (Alternative Smartphones to CMF Phone 1) தொகுத்துள்ளோம்.
சிஎம்எப் போன் 1-ஐ ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 5 காரணங்கள்:
1. இது கஸ்டமைபிலிட்டி (Customizability), பழுதுபார்த்தல் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மையமாக கொண்ட மிகவும் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது .
2. எச்டிஆர் (HDR) மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான பிரகாசமான ஓஎல்இடி டிஸ்பிளேவை (OLED Display) கொண்டுள்ளது
3. பட்ஜெட் விலையில் வந்தாலும் இது சிறந்த பேட்டரி லைஃப்பை வழங்குகிறது (33W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி)
4. ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் மிகவும் நியாயமான சிப்செட்டை பேக் செய்கிறது (ஆக்டாகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5ஜி ப்ராசஸர்)
5. உறுதியான கேமரா இமேஜ் குவாலிட்டியை (Camera Image Quality) வழங்குகிறது (இஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமரா)
சிஎம்எப் போன் 1-ஐ ஏன் வாங்கலாம் தவிர்க்கலாமே என்பதற்கான 4 காரணங்கள்:
1. ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இல்லை; எக்ஸ்ட்ராவாக ரூ.1299 பணம் செலுத்தித்தான் சிஎம்எப்-ன் 33W சார்ஜரை வாங்க வேண்டும்!
2. மிகவும் சாதாரணமான ஐபி52 ரேட்டிங்கையே (IP52 Rating) கொண்டுள்ளது
3. மிகவும் சுமாரான சிங்கிள் லாவுட் ஸ்பீக்கர் (Single Loudspeaker)
4. இஐஎஸ் (EIS) ஆதரவை கொண்டிருந்தாலும் ஓஐஎஸ் (OIS) ஆதரவு இல்லை.
சிஎம்எப் போன் 1-க்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்?
1. விவோ டி3 (Vivo T3)
2. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite)
3. போக்கோ எக்ஸ்6 (POCO X6)
4. ரெட்மி நோட் 13 ( Redmi Note 13)
5. மிகவும் சமீபத்தில் அறிமுகமான ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G)
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட்டுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். கூடவே இது 108-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 3எக்ஸ் இன்-சென்சார் ஜூமிங் ஆதரவு உடனான 13-மெகாபிக்சல் செல்பீ கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,030mAh பேட்டரியையும் கொண்டு உள்ளது.
விலையை பொறுத்தவரை, ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 128ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.15,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி நிறுவனம் இவைகளை "பரிந்துரைக்கப்பட்ட விலைகள்" என்று கூறுகிறது. இதுவே இறுதி விலையா என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த ஸ்மார்ட்போன் ஹவாய் ப்ளூ, பிளாக் டயமண்ட் மற்றும் ஆர்க்கிட் பிங்க் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம், ஷாவ்மீ நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் முக்கிய ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக ஜூலை 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








