Home
Mobile

விற்பனைக்கு ரெடி.. OnePlus Open-ஐ நம்பி வாங்க 5 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க ஒரே ஒரு நியாயமான காரணம்!

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதியன்று இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் அறிமுகமான ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான (Foldable Smartphone) ஒன்பிளஸ் ஓப்பனின் (OnePlus Open) இந்திய விற்பனை நாளை முதல், அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

சாம்சங்கின் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5, கூகுளின் பிக்சல் ஃபோல்ட் உட்பட இதுவரை வெளியான எல்லா நிறுவனங்களின் ஃபோல்டபிள் போன்களுக்கும் போட்டியாக களமிறங்கியுள்ள ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இதோ விவரங்கள்:

விற்பனைக்கு ரெடி.. OnePlus Open-ஐ நம்பி வாங்க 5 காரணங்கள்!

ஒன்பிளஸ் ஓப்பன் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் ஒன்பிளஸ் இணையதளம், அமேசான் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களின் வழியாக அக்.27 முதல் வாங்க கிடைக்கும்.

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு ரூ.8,000 வரையிலான டிரேட்-இன் போனஸ் கிடைக்கும். கூடுதலாக ஐசிஐசிஐ பேங்க் மற்றும் ஒன்கார்டு கார்ட்டுகளை பயன்படுத்தினால் ரூ.5,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ஒன்பிளஸ் ஓப்பன் அம்சங்கள்: இது 1ஹெர்ட்ஸ் - 120ஹெர்ட்ஸ் வரையிலான டைனமிக் ரெப்ரெஷ் ரேட், 2268x2440 பிக்சல்கள் உடனான 7.82-இன்ச் 2கே ஃப்ளெக்ஸி-ஃப்ளூயிட் எல்டிபிஓ 3.0 அமோஎல்இடி இன்னர் டிஸ்பிளேவையும், 10ஹெர்ட்ஸ் - 120ஹெர்ட்ஸ் வரையிலான டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.31-இன்ச் 2கே எல்டிபிஓ 3.0 சூப்பர் ஃப்ளூயிட் அமோஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது

இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் உடன் 16ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, ஓஐஎஸ் மற்றும் இஐஎஸ் ஆதரவு உடனான 48எம்பி மெயின் கேமரா + 64எம்பி டெலிஃபோட்டோ கேமரா + 48எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில் மேலும் 2 கேமராக்கள் உள்ளன: 20எம்பி + 32எம்பி கேமரா. இது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான கேமராக்களாக பயன்படும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் டூயல்-செல் 4800எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 67வாட் சூப்பர்வூக் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இருப்பினும் இதன் ரீடெயில் பாக்ஸில் 80வாட் சார்ஜருடன் இடம்பெறும்.

விற்பனைக்கு ரெடி.. OnePlus Open-ஐ நம்பி வாங்க 5 காரணங்கள்!

ஒன்பிளஸ் ஓப்பன்-ஐ நம்பி வாங்க 5 காரணங்கள்: முதல் காரணம் - இதன் விலை அதன் போட்டியாளர்களை விட மிக குறைவாக உள்ளது; வடிவமைப்பு மிகவும் கட்சிதமாக மற்றும் திருப்திகரமாக உள்ளது மற்றும் இது ஒப்பீட்டளவில் உயர்நிலை அம்சங்களை வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக, இப்போதைக்கு இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் புதிய ஃபோல்டபிள் போனாக இது திகழ்கிறது.

இரண்டாவது காரணம் - இதன் டிஸ்பிளே! துடிப்பான வண்ணங்கள் மற்றும் நல்ல கான்ட்ராஸ்ட்டை வழங்கும் இதன் எல்டிபிஓ பேனல் மிகவும் மென்மையான அனுபவத்தையும் உறுதி செய்கிறது. இது பேட்டரி லைஃப்பை ஓரளவிற்கு சேமிக்கிறது. அதே சமயம் சந்தையில் உள்ள பிரகாசமான டிஸ்பிளேக்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

மூன்றாவது காரணம் - ரீடெயில் பாக்ஸில் சார்ஜரை சேர்ப்பதை நிறுத்திய மற்ற நிறுவனங்களுடன் ஒன்பிளஸ் சேரவில்லை. ஏனென்றால் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் சார்ஜரும் இடம்பெறுகிறது. நான்காவது காரணம் - இதன் கேமராக்கள். லைட்டிங் நிலைமைகளை பொறுத்து சினிமா தரத்திலான அவுட்புட்க்களை நெருங்கும் அளவிற்கு இதன் கேமராக்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.

ஐந்தாவது காரணம் - அட்டகாசமான செயல்திறன்! இது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை இயக்கும் அதே சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மல்டி டாஸ்கிங்காக இருந்தாலும் அல்லது கேமிங்காக இருந்தாலும் இதன் செயல்திறன் வேகமாக இருக்கும். இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், ஒன்பிளஸ் ஓப்பனில் லேட்டஸ்ட் UFS 4.0 ஸ்டோரேஜ் சொல்யூஷன் சேர்க்கப்பட்டுள்ளது. இது பழைய UFS வெர்ஷன்களை விட மிகவும் வேகமாக இருக்கும்.

ஒன்பிளஸ் ஓப்பன்-ஐ வாங்காமல் தவிர்ப்பதற்கான ஒரே ஒரு காரணம்: விலைக்கு ஏற்ற வாட்டர் ரெசிஸ்டென்ட் ரேட்டிங் இல்லை. இந்த ஸ்மார்ட்போன் ஐபிஎக்ஸ்4 ரேட்டிங் உடன் வருகிறது. அதாவது இது பல்வேறு திசைகளில் இருந்து தெறிக்கும் தண்ணீரை தாங்கும் திறனை கொண்டுள்ளது என்று அர்த்தம். மற்ற நிறுவனங்களின் பல வகையான ஃபிளாக்ஷிப் போன்களில் ஐபி68 ரேட்டிங் உள்ளது. இது சுமார் 30 நிமிடங்களுக்கு தண்ணீருக்குள் தாக்குப்பிடிக்கும் திறனை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 Reasons to Buy 1 Reason to Avoid OnePlus Open India Sale Starts Tomorrow October 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X