Home
Mobile

அடிச்சு தூக்கும் டிஸ்கவுண்ட்.. ரூ.17999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி கேமரா, 80W சூப்பர்வூக் சார்ஜிங், 5500mAh பேட்டரி, அட்ரினோ கிராபிக்ஸ் போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் (OnePlus Nord CE4 Lite) போன் அமேசான் விற்பனையில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் மாடலில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன. இதன் விலை மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் விவரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite Specifications): இந்த சிஇ4 லைட் மாடலின் சிப்செட் மட்டும் முந்தைய சிஇ3 வெர்ஷனை போலவே வருகிறது. மற்றபடி கேமரா, டிஸ்பிளே மற்றும் பேட்டரி சிஸ்டம் அப்கிரேட் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த போனில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

அடிச்சு தூக்கும் டிஸ்கவுண்ட்.. ரூ.17999 போதும்.. SONY கேமரா மாடல்!

இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெலொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. நோர்ட் சிஇ3 மாடலில் எல்சிடி டிஸ்பிளே மட்டுமே கொடுக்கப்பட்டது. அதேபோல சிஇ3 மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் வந்தது. ஆனால், இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (OxygenOS 14) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 6என்எம் எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 695 6nm SoC) சிப்செட் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் மீடியமாகவே இருக்கும். இருப்பினும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் புது யுஐ அனுபவம் கொடுக்கலாம்.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. மேலும், 1 டிபி ஸ்டோரேஜ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. சோனி சென்சாருடன் கூடிய டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

ஆகவே, சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் 50 எம்பி மெயின் + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS), ஈஐஎஸ் (EIS) மற்றும் சிஏஎப் (CAF) மற்றும் பிடிஏஎப் (PDAF) ஆட்டோபேகஸ் சப்போர்ட் உள்ளது. மேலும், சிங்கிள் கலர் டெப்ரேச்சர் சென்சாருடன் டூயல் எல்இடி வருகிறது.

பட்ஜெட்டில் வெளியாகி இருப்பதால், 1080p வீடியோ ஷூட் சப்போர்ட் மட்டுமே உள்ளது. 16 செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் பிக்ஸ்ட் போக்ஸ் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. ஹைபிரிட் டூயல் சிம் சிலாட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனில் முந்தைய மாடலைவிட 500mAh கேபாசிட்டி கூடுதலாக 5500mAh பேட்டரி வருகிறது. அதேபோல 80W சூப்பர்வூக் சார்ஜிங் வருகிறது. IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. முன்னதாக ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.18,999 பட்ஜெட்டில் விற்பனையானது. ஆனால், இப்போது, அமேசான் பிரைம் கஸ்டமர்களுக்கு கூடுதலாக ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
5 Percent Discount OnePlus Nord CE4 Lite 5G With 50MP Camera in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X