இந்த 5 அம்சங்களை பற்றி அறிந்த பின்னர் ஆண்ட்ராய்டு போன்களை உங்களுக்கு பிடிக்காது.!

அப்படியான மென்பொருள்களில், ஒரு குறுகிய காலத்தில் உலகளாவிய சந்தை வெற்றியை பெற்றவொரு ஓஎஸ் தான் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஆக்சிஜென் ஓஎஸ்.!

|

ஓஎஸ் (OS) எனப்படும் ஒரு ஸ்மார்ட்போனின் ஆப்ரேட்டிங் சிஸிடம் (மென்பொருள்) ஆனது அந்த ஸ்மார்ட்போனை முழுமையானதொரு கருவியாகும் அல்லது ஓரங்கட்ட வழிவகுக்கும். ஒரு திறன்மிகுந்த வன்பொருள் ஆனது, எப்போதுமே சிறப்பான பயனர் அனுபவத்தை வழங்குவதில் தோல்வியடையாது.

அப்படியான பயனர் அனுபவம் மற்றும் ஓஎஸ் சார்ந்த தோனைகளை கிட்டத்தட்ட ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களிலும் நாங்கள் ஈடுபடுத்தியுள்ளோம். இன்னும் ஒருபடி மேல் சென்று வெளிப்படையாக கூறவேண்டுமெனில், ஒரு ஸ்மார்ட்போனின் வெற்றி அல்லது தோல்வியை வரையறுக்க எங்களுக்கு உதவுவது அதன் மென்பொருள் தான்.

அப்படியான மென்பொருள்களில், ஒரு குறுகிய காலத்தில் உலகளாவிய சந்தை வெற்றியை பெற்றவொரு ஓஎஸ் தான் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஆக்சிஜென் ஓஎஸ்.!

ஆண்ட்ராய்டு ஓஎஸ் மீதான மோகம் குறையும்.!

ஆண்ட்ராய்டு ஓஎஸ் மீதான மோகம் குறையும்.!

ஆண்ட்ராய்டின் தனிப்பயனாக்கப்பட்ட பதிப்புடன் இணைந்திருக்கும் இந்த மென்பொருளானது, ஆண்ட்ராய்டு அனுபவங்களைக் காட்டிலும் வேகமான, தூய்மையான மற்றும் அதிக தனிப்பயனாக்கக்கூடிய ஒரு சுத்திகரிக்கப்பட்ட ஆண்ட் ராய்டு அனுபவத்தை வழங்குகிறது என்றே கூறலாம். அப்படியான ஆக்சிஜென் ஓஎஸ் கொண்டு இயங்கும் சமீபத்திய ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனில், சில தவிர்க்கமுடியாத ஆக்சிஜென் ஓஎஸ் அம்சங்கள் உள்ளன. அவைகளை பற்றி அறிந்த பின்னர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் மீதான மோகம் குறைகிறது என்றே கூறலாம்.

பேஸ் அன்லாக்

பேஸ் அன்லாக்

ஒன்ப்ளஸ் 5டி ஆனது பேஸ் அன்லாக் அம்சத்தை ஆதரிக்கும் Oஆக்சிஜென் ஓஎஸ்-ன் சமீபத்திய பதிப்பை கொண்டு இயங்குகிறது. இது ஆக்சிஜென் ஓஎஸ்-ல் புதிதாக சேர்க்கப்பட்டதொரு பாதுகாப்பு அம்சமாகும். இது பயனர்கள் தங்கள் சாதனத்தை பார்ப்பதின் வழியாக அன்லாக் செய்ய அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு சந்தையில் வேகமாக வளர்ந்துவரும் இந்த அம்சமானது, ஒன்ப்ளஸ் 5டி-ல் சுமார் 100-க்கும் மேற்பட்ட முக அடையாளங்காட்டிகளை கொண்டு பயன்படுத்தப்படுகிறது. இது மிக வேகமானது, பாதுகாப்பானது உடன் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் எதிர்கால கருவிகளின் ஆதாரத்தை உருவாக்குகிறது என்பதில் ஐயமில்லை.

ஒன்ப்ளஸ் ஸ்விட்ச்

ஒன்ப்ளஸ் ஸ்விட்ச்

நீங்களொரு புதிய தொலைபேசிக்கு மாறும் போது, பழைய ஸ்மார்ட்போனில் உள்ள உங்கள் தொடர்புகள், படங்கள் / வீடியோக்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பரிமாறுவதில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்திப்பீர்கள், அல்லவா.? அதனை மிகவும் எளிமையாக்கும் ஒரு அம்சம் தான் ஒன்ப்ளஸ் ஸ்விட்ச். இது ஆக்சிஜென் ஓஎஸ்-ன் மிகச் சமீபத்திய அப்டேட்களில் ஒன்றாகும்.

இது ஒரு புதிய ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனிற்கு மிக எளிமையான முறையில் எல்லா கோப்புகளையும் இடம் மாற்றுவதற்கு அனுமதிக்கிறது. இதன் ப்ரீ-டூ-இன்ஸ்டால் மைக்ரேஷன் ஆப் கொண்டு, க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யவேண்டும் பின்னர் நீங்கள் மாற்ற விரும்பும் கோப்புகளை தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான். இதன் சிறந்த பகுதி என்னவெனில், தரவு இணைப்பு இல்லாமலும் கூட இது செயல்படும்.

ஓப்பன் பீட்டா ப்ரோகிராம்

ஓப்பன் பீட்டா ப்ரோகிராம்

ஒன்ப்ளஸ் 5டி-ல் மென்பொருள் ஒரு பெரிய பகுதியாக உள்ளது. இது உண்மையில் சாதனத்தின் உந்து சக்தியாக திகழ்கிறது. வேறு எந்த ஆண்ட்ராய்டை போலில்லாமல், ஆக்சிஜென் ஓஎஸ் ஆனது ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு வடிவங்களில்; பீட்டா, ஓப்பன் பீட்டா மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீடு ஆகிய வடிவங்களை கொண்டுள்ளது.

இது பயனர்களுக்கு மிக இணக்கமாக செயல்படும் ஒரு மென்பொருள் தளத்தை உறுதி செய்கிறது. இதில் மிகவும் சுவாரஸ்யமானது - ஓப்பன் பீட்டா ப்ரோகிராம் ஆகும். சமூக கட்டமைப்புகளை சார்ந்த இந்த அம்சமானது பீட்டா மென்பொருள் புரோகிராமை பிரதிநிதித்துவம் செய்கின்றன, இதன் மூலம் பயனர்கள் ஒவ்வொரு அம்சத்தையும் சரிபார்க்கவும், மாற்றவும் உதவும். அதாவது ஓப்பன் பீட்டா நிரலுக்காக நீங்கள் பதிவு செய்தால், நீங்கள் பிரத்தியேக அம்சங்களுக்கான ஆரம்ப அணுகலைப் பெறுவீர்கள். நீங்கள் அவைகளை பரிசோதிக்க முடியும். அது சார்ந்த கருத்தளிப்பில் பங்கேற்க முடியும்.

கேமிங் டூ நாட் டிஸ்டர்ப்

கேமிங் டூ நாட் டிஸ்டர்ப்

ஆக்ஸிஜன் ஓஎஸ் ஆனது கேமிங்கில் ஒரு சிறப்பு கவனம் கொண்டுள்ளது. அது ஒன்ப்ளஸ் 5டி வழியாக உங்களின் தீவிரமான கேமிங் அமர்வுகளை எந்தவொரு சிறு தலையீடும் இல்லாமல் நிகழ அனுமதிக்கும். அதற்கு பிரத்தேயேகமான டூ நாட் டிஸ்டர்ப் என்க்ரியா அம்சமும் கொண்டுள்ளது. இதை செய்லபடுத்த செட்டிங்ஸ் > அட்வான்ஸ்டு > கேமிங் டூ நாட் டிஸ்டர்ப் என்கிற தேர்வை நிகழ்த்தவும். இது இயக்கப்பட்டதும், பயணப்பாடுகள் சார்ந்த அறிவிப்புகள் தவிர்க்கப்படும், ஆனால் முக்கியமான அழைப்புகள் மற்றும் நோட்டிபிகேஷன்களை நீங்கள் இழக்கவில்லை என்பதையும் உறுதிசெய்யும். உடன் இந்த அம்சமானது, ஆன்-ஸ்க்ரீன் கெபாசிட்டிவ் பொத்தான்கள் மற்றும் ஆக்சிடென்டல் டச்சஸ் ஆகியவைகளையும் தவிர்க்க உத

How to Find a domain easily for your business (TAMIL)
தனிப்பயனாக்கத்தின் ஆழமான நிலை

தனிப்பயனாக்கத்தின் ஆழமான நிலை

ஆண்ட்ராய்டு தனிப்பயனாக்கங்களை விட ஒன்ப்ளஸ் கஸ்டமைசேஷன் சிறப்பானதாக உள்ளது. ஏனெனில் ஒன்ப்ளஸ் 5டி-ல் நீங்கள் ஒவ்வொரு அம்சத்தையும் தனிப்பயனாக்கலாம். பட்டன் லேஅவுட், ஸ்க்ரீன் கலர்ஸ், டெக்ஸ்ட் பாண்ட், டைப்போகிராபி, போல்டர் கலர், நோட்டிபிகேஷன் ஸ்டைல் போன்ற கஷ்டம் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த அம்சங்களையெல்லாம் அறிந்த பின்னர் நநீநகலொரு ஒன்ப்ளஸ் 5டி வாங்க விரும்பினால், அதன் விலை பற்றி அறிய விரும்பினால் வேறெங்கும் செல்ல வேண்டாம். அதன் 6 ஜிபி ரேம் மாறுபாட்டின் விலை ரூ.32,999/- ஆகும். மறுகையில் உள்ள 8 ஜிபி ரேம் மாறுபாட்டின் விலை ரூ.37,999/- ஆகும். இன்று (மார்ச் 16) முதல் மார்ச் 22 வரி இஎம்ஐய பரிவர்த்தனைகளில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1500/- கேஷ்பேக் கிடைக்கும் என்பதும், அமேசானில் ரூ.2000/- மதிப்பிலான எக்ஸ்சேன்ஜ் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் உள்ள ஒன்லஸ் எக்ஸ்பீரியன்ஸ் அங்காடியிலும் இந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
5 OxygenOS features that make OnePlus 5T an irresistible choice. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X